FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on February 27, 2012, 09:58:24 PM

Title: ஊடகம்...!
Post by: Yousuf on February 27, 2012, 09:58:24 PM
படித்ததில் மிகவும் பிடித்தது!

நல்லதை நாடறிச்செய்யும்
நற்போக்குவாதி!
தீயதை சுட்டிக்காட்டியெரிக்கும்
நெற்றிகண்யோகி!

நலவையும் எழவாய்க் காட்டி
எழவையும் நலவாய்க் காட்டும்
எந்திரப்பேனா!
நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி
நடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்
மாய மை!

ஊடலென்ன கூடலென்ன
ஊர்வம்பை விலைக்கு வாங்கி
உண்மையென்றும் பொய்மையென்றும்
ஊதலில்லாமலே
ஊதிப் பெரிதாக்கிடும் ஊதல்!

காதலென்றும் காமமென்றும்
கதைகள்பல திரித்து
கருவிலிருக்கும் சதை பிண்டத்திற்க்கும்
கண்வைத்து கைகால் வைத்து
களியையும் கல்லாய் செதுக்கும் சிற்பி!

விற்பனைக்காக வில்லங்கத்தையும்
வீணாப்போனவைகளையும்
விலையில்லாமலே வாங்கும் அதிபுத்திசாலி
காசுக்காக கழிசடைகளையும்
காட்சிப்பொருளாக்கும் விலையுள்ள கண்காட்சி!

உள்ளதை உள்ளபடி
உலகுக்கு எடுத்துரைத்து
உண்மைகளை மறைத்திடாத
நியாயத் தராசு!

நல்லவைகளை நாகரீகமாய்
வெளிச்சம் போட்டுக்காட்டி
நியாயமாக அலசி ஆராய்ந்து
வெளியிட்டுத் திறமையைக்காட்டும்
நேர்மையான நீதி!

இவையெல்லாம் அடங்கிய
உலகெங்குமுள்ள ஊடகங்களின்
உன்னத போக்கு
உண்மையின் உறைவிடமாக
ஏற்றத் தாழ்வுகளில்லாமல்
எல்லோருக்கும் சரிசமமாக
ஊர்வலம் வந்தால்
இவ்வுலகமே அறியும்
உண்மையின் நாக்கை!....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Title: Re: ஊடகம்...!
Post by: ஸ்ருதி on February 27, 2012, 10:36:07 PM
ஊடலென்ன கூடலென்ன
ஊர்வம்பை விலைக்கு வாங்கி
உண்மையென்றும் பொய்மையென்றும்
ஊதலில்லாமலே
ஊதிப் பெரிதாக்கிடும் ஊதல்!


நல்ல கவிதை
உண்மையை உரைக்கும் ஊடகம் காண்பது அரிது  :)
Title: Re: ஊடகம்...!
Post by: Yousuf on February 27, 2012, 10:49:45 PM
உண்மைதான் சகொதைர் ஸ்ருதி நேர்மையான ஊடகங்களை காண்பது அரிது. அப்படியே நேர்மையான ஊடங்கள் செயல் பட்டாலும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கும், அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறைக்கும் ஆட்படுத்த படுகின்றன!

நிதர்சனமாக அன்றாடம் ஊடகங்கள் என்ற பெயறில் நடக்கும் ஏமாற்று வித்தையை தனது கவிதை வரிகளின் மூலம் அழகாக சொன்ன அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கே பாராட்டுக்கள் அனைத்தும்!
Title: Re: ஊடகம்...!
Post by: RemO on February 27, 2012, 11:14:34 PM
உண்மையான கவிதை யூசுப், ஊடகங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்னும் இக்காலத்தில் பல ஊடகங்கள் லாபம் வேண்டியும் அதிகார வர்கத்தின் அடக்குமுறையாலும் ஊமையாக நிற்கின்றன, ஒரு நாடு நல்லரசாக ஊடகங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்,
Title: Re: ஊடகம்...!
Post by: Global Angel on February 28, 2012, 04:29:04 AM
ஊடகம் என்றது கைல இருக்கும் கத்தி போல ..... களையும் எடுக்கலாம் ... கருவும் அறுக்லாம்.... எனவே ஊடகவியலாளர்கள் சிந்திச்சு செயல் படனும் .... நல்ல கவிதை யோசுப்
Title: Re: ஊடகம்...!
Post by: Yousuf on February 28, 2012, 10:32:12 AM
பாராட்டுக்கள் அனைத்தும் சகோதரி மலிக்கா அவர்களுக்கு!

நன்றி ஏஞ்செல் & ரெமோ!
Title: Re: ஊடகம்...!
Post by: suthar on February 29, 2012, 02:17:35 AM
paaratukkal ungalukum malikkavirkkum
nala muyarchi
sinthika mudiya varigal.......
Title: Re: ஊடகம்...!
Post by: Yousuf on February 29, 2012, 11:18:09 AM
நன்றி சகோதரர் சுதர்!