FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on February 27, 2012, 03:49:58 PM

Title: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on February 27, 2012, 03:49:58 PM
தனுஷ் எழுதிப் பாடி நடித்துள்ள கொலவெறி பாடல் இணையத்தால் பெரும் ஆரவார வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதற்கு தமிழ்நெறியாளர்கள், கவிஞர்கள், பிறமொழி பாடகர்கள், கவிஞர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.


http://www.youtube.com/v/7-GmD7hxDy0&feature=player_embedded

அப்பாடல் இங்கே வரிவடிவில்:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Prem on February 27, 2012, 06:31:54 PM
tamil nam moochi tamil nam pechi tamil than namathu desam

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1192.photobucket.com%2Falbums%2Faa334%2Fpremk786%2F11111.gif&hash=33b0b0044e81020b83925c680c9a65d200a24dfe)
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on February 27, 2012, 07:54:06 PM
நன்றி பிரேம் மச்சி!
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: RemO on February 27, 2012, 11:58:28 PM
தமிழ் நாட்டில் உயிருக்கு போராடும் தமிழ் வேறு நாட்டில் நலமுடன் வாழ முயற்சிக்கிறது
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on February 28, 2012, 10:16:15 AM
தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைத்தான் சினிமா என்ற ஊடகம் மயக்கி அவர்களை சிந்திக்க விடாமல் சினிமா என்ற போதைக்கு அடிமை படுத்தி விட்டதே!

தமிழர்கள் தான் சினிமாவின் அடிமைகளாகி விட்டார்களே பிறகு அவர்களுக்கு எங்கிருக்கு சமுதாயத்தின் மீதும் தன் தாய் மொழியின் மீதும் அக்கறை ஏற்பட போகிறது!

நன்றி ரெமோ!
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Global Angel on March 02, 2012, 12:52:21 AM


பொழுது போக்குக்காக பாடபட்ட பாடல் ஏன் தர்க்கத்துக்கு உள்ளாகனும் .......தமிழ் மொழி வாழணும்னு சொல்றவங்களே தமிழை போட்டு கொலை செயுறாங்க .... அது ஒரு பொழுது போக்கு பாடல் ..... அதுக்கு ஏன் இவளவு தர்க்கம்னு புரியல.... தனுஸ் semmoli மாநாட்டில் அதை பாடவிலையே .... பொழுது போக்குக்காக அதை பாடி வரவேற்ப்பை பெற்றுள்ளது .... தமிழன் பொறமை பிடித்தவன் என்பது தேட்ட தெளிவாகிறது ....
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on March 02, 2012, 10:50:30 AM
ஏஞ்செல் எதை நீங்கள் பொழுது போக்கு பாடல் என்று கூறுகிறீர்கள். பெண்களை பற்றி கேவலமாக சித்தரித்து பாடி இருக்க கூடிய கொலைவெறி பாடல் உங்களுக்கு பொழுது போக்கா? சற்று சிந்தித்து பாருங்கள் நீங்களும் ஒரு பெண் தானே?
நான் அந்த பாடலின் வரிகளை இங்கு பதிவு செய்கிறேன் உங்களுக்கு அர்த்தம் விளங்க வில்லை என்றால் ஒரு முறை படித்து புரிந்து கொள்ளுங்கள்.


yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain please
why this kolaveri..di

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english..

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

பெண்களுக்கு மனது கருப்பு என்று இந்த பாடலில் வருகிறதே இது உங்களுக்கு பொழுது போக்கா? நீங்கள் எடுத்து கொண்டாலும் பொழுது போக்காக சில தன்மானம் படைத்தவர்கள் எப்படி இதை சரி என்று எடுத்து கொள்ளுவார்கள்?
சரி அதை விடுங்கள் க்லச்சில் ஸ்காட்ச் இருக்கிறது என்று பாடுகிரரே ஒரு படைப்பாளியின் படைப்பு சீர்திருத்த கூடியதாக அமைந்து இருக்கலாமே என் மதுவை ஆதரிக்க கூடிய வகையில் சீர்கொஎடுக்க கூடியதாக அமைந்துள்ளது?

இதில் நீங்கள் தமிழர்களுக்கு பொறாமை என்று கூறுகிறீர்களே தமிழனுக்கு இதில் உண்மையில் பொறாமை இருந்து இருந்தால் இதை விட கேவலமாக பாடல் எடுத்திருக்க வேண்டும்.

தமிழன் இதில் பொறாமை படவில்லை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று நினைத்தான் அது உங்களுக்கு தவறாக பட்டால் நீங்களும் சினிமாவுக்கு அடிமையாகி விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

தமிழனை குறை சொல்வதில் பயனில்லை. இன்னும் பெண்களை பற்றி இழிவாக அமைந்த இப்பாடலை எதிர்க்க கூடிய சில தன்மான தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Bommi on March 03, 2012, 06:29:59 PM
Tamil...... Tamil........Tamil

 Tamile  engal uyir muchu!
 Tamile  engal  pechu!
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on March 03, 2012, 06:38:27 PM
நன்றி பொம்மி!
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Global Angel on March 05, 2012, 04:44:05 AM


எதற்கு  பெண்ணை இழுக்கணும் யோசுப் ... எத்தனையோ பாடல் விரசமாக  கொடூரமாக வந்திருக்கு அதை எல்லாம் இப்படி உக்காந்து விமர்சிதிர்களா ....? அவன் காதலித்த பெண்ணால் ஏமாற்ற பட்டான் அதற்காக அந்த கதை கருவுக்கு பாடல் .... எத்தனையோ பெண்கள் குடியும் குடித்தனமுமாக இருகின்றார்கள் ...... நான் பெண் என்ற காரணத்தால் எல்லா பெண்ணும்  ஒழுங்கு என்று என்னால் சொல்ல முடியாது ... நாடிலே நடப்பதைத்தான் அவர்கள் பாடி இருகின்றார்கள் .... அது பொழுது போக்கு பாடல்... எத்தனையோ காமத்தை தூண்டும் விரச பாடல்கள் வந்ததே அதற்க்கு  யார் வாய் துறந்திர்கள்....  இந்த பாடல் பிரபலம் ஆனது .... அது ஆகாமல் இருந்திருந்தால் இன்று இதை பேசி இருந்திருக்க மாடிங்கள் ....இந்த பாடல் ஏமாற்றும் பெண்களுக்கும் .. வாழ்கையில் நெறி முறை தவறும் பெண்களுக்கும்தான் சுட வேண்டும் .... மட்ட்ரவர்களுக்கு அல்ல ... தமிழை வளர்குறேன் என்று சொல்லும் எவனும் தமிழை  மட்டும் பேசி சுவாசித்து வாழ்ந்துகொண்டு இருப்பதாக சரித்திரமே இல்லை  ...  அதற்க்கு என் கருத்தை பதிவு செய்தேன் என் சொந்த கருத்தை பதிவு செய்ததற்கு  பெண்தானே நீங்கள் என்று கேட்பது ஏற்புடையதாக எனக்கு படவில்லை ...  :)


இதை விட கேவலமான பாடல்கள் இனியா வரவேண்டும் .... ஏற்கனவே வந்தவை எல்லாம் என்ன கோவிலில் பாடக்கூடிய பாடல்களா ... ஏற்கனவே வந்த பாடல்களுடன் ஒப்பிட்டால் இது ஒன்றும் எனக்கு கேவலமாக படவில்லை காரணம் அந்த பாடலில் சித்தரிக்கும் பொன்போல் நானில்லை அப்படி இருந்தால்தான் எனக்கு கோபம் வரவேண்டும்  :)
Title: Re: கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Post by: Yousuf on March 05, 2012, 09:27:02 AM
இதை பற்றி எதுவும் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை!

நன்றி ஏஞ்செல்!