FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 27, 2012, 12:06:23 AM
-
கனவுகள்
பட்டப்பகலில்
நிதானமாய் நடக்கிறேன்
கருமிருட்டில்
யாரும் துரத்தாமலேயே
மூச்சிரைக்க ஓடுகிறேன்
கல்லும் முள்ளும்
கால்களுக்கடியில்
இடறவில்லை குத்தவில்லை
அதிக தூரம் ஓடினேன்
மூச்சிரைக்கவில்லை
வியர்வையில் நனையவில்லை
ஒட்டு கந்தை
உடலிலில்லை
வெட்கம்
உயிர் சாவதுபோல்
விம்மி விம்மி
அழுகின்றேன்
கன்னத்தில் துளியேனும்
கண்ணீரில்லை
ஒற்றை சக்கர
மிதிவண்டி
வேகமாய் ஓட்டி
வானில் பறக்கின்றேன்
பள்ளிச்செல்லும்
அவசரமும்
பரீட்சை எழுதும்
பரிதவிப்பும்
விடாது என்னை
பற்றிக்கொள்ள
சிங்கம் யானை
மிருகமெல்லாம்
என்னை துரத்த
பயத்தாலெந்தன்
உடல் முழுதும்
நடுக்கத்துடன்
நான் ஓடி
ஏதோ ஒரு
வீட்டின் மீது
ஏறிச் சென்று
நிற்கின்றேன்
திரைப்படமும்
பார்ப்பதில்லை நடிகருக்கும்
நான் விசிறியில்லை
கமலஹாசன்
பல சமயம்
சரத்குமார்
சில சமயம்
இப்போதெல்லாம்
சத்யராஜ் என்று
இவரையெல்லாம்
இலவசமாய்
காண்கின்றேன்
இன்னும் இன்னும்
எத்தனையோ
வியக்கவைக்கும்
காட்சியெல்லாம்
கண்டு மனம்
ரசித்ததுண்டு
லயித்ததுண்டு
காமம் மட்டும்
இடைமறித்ததில்லை
கண்விழித்த பின்னும்
சில நேரம்
நினைவினிலே
தொடர்வதுண்டு
மறக்கவே கூடாதென்று
எண்ணியவை பலவுண்டு
ஆனால்
தான்னாலே
மறந்த போது
மனம்
தவியாய் தவிப்பதுண்டு
nan padithu sasithathu