FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on February 26, 2012, 08:29:15 PM
-
ஸுஹைல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; ''ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இறைவனின் பிரியத்திற்கும், மக்களின் பிரியத்திற்கும் என்னை ஆளாக்குமே அப்படிப்பட்ட ஒரு செயலை எனக்கு சொல்லுங்கள் யா ரஸுலுல்லாஹ் என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள் உலகபற்றற்று வாழுங்கள் அல்லாஹ் உங்களை பிரியப்படுவான், மக்கள் கைகளில் உள்ளதை பற்றற்று இருங்கள் மக்கள் உங்களைப்பிரியப்படுவார்கள் என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
இயற்கையாகவே மனிதன் சமூகத்தோடு கலந்து வாழுகிற அமைப்பிலே படைக்கப்பட்டிருக்கிறான், அவன் சமூகத்தில் மதிப்பிற்குரியவனகவும் குடும்பத்தில் பிரியத்திற்குரியவனாகவும் வாழ ஆசைபடுகிறான், இப்படி வாழும்பொழுது இறைவனின் பொருதத்தை பெற்றவனாகவும், அவனது பிரியத்திற்குரியவனாக வாழ ஆசைபடுகின்றான், அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி அமைக்கவேண்டும் என்று சஹாபாக்கள் தீட்சண்னியமாக கேட்டுவைத்தார்கள்
வாழ்வியல் கலையை வகுத்துத்தர வந்த வல்லவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு அழகாக விடை பகர்ந்தார்கள் எவ்வளவு அழகான இன்னும் ஆழமான பதில் என்று பாருங்கள். இறைவனுக்கு பிரியமாவதற்கு உலகப்பற்ற தன்மை வேண்டும். ஜுஹுத் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
இமாம்கள் ஜுஹுத் என்ற அரபி வார்த்தைக்கு விளக்கம் தரும்போது உலகப்பேராசை கொள்ளாது இருப்பது, இன்னும் எது இவ்வுலகில் கிடைக்கவில்லை அதைப்பற்றி கவலை அற்று இருப்பது இன்னும் ஒரு இமாம் இப்படி கூறிப்பிடுகிறார்கள் "எதனால் மறுமையில் எவ்வித பிரயோஜனமும் இருக்காதோ அதைவிட்டு தவிர்ந்து இருப்பது இதில் மறுமையில் இடையூறு தரக்கூடியதும் அடங்கும் மறுமையில் பிரயோஜமும் அதுவும் அடங்கும்.
இதற்கு ஒரு அழகிய முன்னுதாரணம் ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கைதான் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, அப்துற்றஹ்மான் இப்னு அவ்ப் மற்றும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய ஸஹாபாக்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள் .ஆனால் அந்த செல்வத்தின் ஆட்சி அவர்களின் இதயத்தில் இருக்கவில்லை.எத்துணை கோடிகள் வந்தாலும் எத்தணை கோடிகளை இழந்தாலும் அவர்களின் இதயத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. ஆகையால் தான் ஸித்திக்குல் அக்பர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் எந்த பொருளும் இல்லாமல் அனைத்தையும் இறைவழியில் செலவு செய்ய முடிந்தது
சுலைமான் அலைஹிஸ்ஸலாம், தாவூத் அலைஹிஸ்ஸலாம் மிகப்பெரும் அரசர்களாக இருந்தார்கள் ஆனால் அவர்கள் மிகப்பெரும் ஜாஹித்களாக (உலகப்பற்றறவர்களாக இருந்தார்கள்) இதை நபியின் இன்னொரு ஹதீஸ் இப்படி விளக்குகிறது உலக பற்றற்தன்மை என்பது நாம் எண்ணுவது அல்லது பார்ப்பது போன்று ஹலாலான பொருட்களை ஹரமாக்குவதிலோ அல்லது பொருட்களை தேடாமல் இருப்பதிலோ அல்ல மாறாக உன் கையில் இருக்கும் பொருள் மீது நீ வைக்கும் நம்பிக்கையை விட இறைவனிடத்தில் இருப்பதிலே அதிக நம்பிக்கை வைப்பது எத்துணை அழகாக நபி பெருமானார் வர்ணித்துள்ளார்கள்.
மில்லினியம் ஆண்டில் இறைவனுக்கும் பிரியமானவர்களாக இன்னும் மக்களுக்கும் பிரியமானவர்களாக வாழுதல் சாத்தியமில்லை என்று பேசித் திரிபவர்களுக்கு நபி அவர்களின் இந்த வார்த்தை எத்தணை பொருத்தமானது சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் வழியில் நடக்கிற நஸிபையும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதிலிருந்து விலகி இருக்கிற நிலையை வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.