FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on September 16, 2017, 09:38:11 PM
-
பன்னிரண்டு நாள்கள் உணவு நீர் இன்று
நீ இருந்தது எம் ஈழத்துக்காக
இன்று நீ மண்ணில் விதைக்கப்பட்டு
30 ஆண்டனாலும் நீ நீக்கவில்லை எம்மை விட்டு
மருத்துவன் ஆகவேண்டிய நீ
தாயகத்துக்காக ஆயுதம் ஏந்தினாய்
அடக்கும் அந்நியனை அகற்ற
கடைசியில் அகிம்சையை கையில் ஏந்தினாய்
கண்களின் புரட்சி
கலங்க மற்ற மனது
கல்லான இதயத்தை கூட
கனியச செய்துவிடும் இவர் பேச்சு
அதுமட்டும் இல்லை தீபராகும்
பேச்சு இவருக்கு உறவு தான்
இவர் கண்ட கனவு ஒன்றே
அது கலங்கமற்ற கனவு அது
ஈழம் என்ற நாட்டை
உரித்தானவனுக்கே உறவாக வேண்டும் என்பதே
எம் உயிருக்குள் அகிம்சை தீபம் கலந்தவனே
கண்கள் கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தாலும் உமக்கு,
கர்வம் எம் மனதோரம் பிறக்கத்தான் செய்கிறது.
தலைவன் கனவு நிறைவேற உயிர் துடித்தார்
அந்நிய படையை அகற்ற அகிம்சை கொண்டார்
இன்று இவன் புகழுக்கு இணையாக எவர் உண்டு இவ்வையகத்தில் .....
இவர் பெருமை கூற
இவ் ஜென்மம் போதுமா?
குரல் கொடுப்பவனின் குரல் வளையையே நசுக்கும்
கொடிய காலத்திலே இனத்துக்கா உயிரை விட்டவனின் கனவு
இன்றுவரை முழுதாய் நிறைவேறாமலே இருக்கிறது ????
-
ஈழம் உரித்தது யார்க்கு என்று இன்று வரை முடிவில்லை
அகிம்சையின் வழி மட்டும் போதாது சில நேரம்
மரணம் சில நேர சலனம் தரும் அவ்வளவே
எதுவாயினும் அவருக்காக பிரார்த்திப்போம்