FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 25, 2012, 02:03:04 PM
-
சுருட்டை முடியை நேராக்குவது, நீள கூந்தலை வெட்டிவிடுவதும் பின்னர் அதை சுருள் சுருளாக மாற்றுவதும் இன்றைய இளைய தலைமுறையினரின் வழக்கமாக உள்ளது. ஆணோ, பெண்ணோ கூந்தலை நேராக்குவதும், சுருட்டையாக்குவதும் ஆபாத்தானது என்கின்றனர் நிபுணர்கள். இதற்காக அழகு நிலையங்களில் உபயோகிக்கபடும் ரசாயனங்கள் கூந்தலை பாழக்கிவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பக்கவிளைவுகள்
முடியை நேராக்குதல் (ஹேர் ஸ்டெரெய்டனிங்) எனப்படும் கூந்தல் அழகுக் கலை இன்றைக்கு பெரும்பாலான இளைய தலைமுறையினரிடம் பரவி வருகிறது. இதற்காக கூந்தலை ப்ரீஸ் செய்து அதில் ரசாயனம் பூசி, பின்னர் சூடேற்றுவதால் கூந்தலான நேராக நிற்கிறது. இயற்கையாக உள்ள கூந்தலை இப்படி செயற்கையாக மாற்றுவதால் கூந்தல் உடைந்து உதிர வாய்புள்ளதாம்.
விழாக்களுக்கு செல்லும் போது டெம்பர்வரியாக கூந்தலை நேராக்குபவர்கள் ஒரு புறம் உள்ளனர். அதே சமயம் சுருட்டை முடி உள்ளவர்கள் நிரந்தரமாக முடியை நீளமாக்க பார்லர் செல்வது வாடிக்கை. இதில் சுருட்டை முடி உள்ளவர்களின் கூந்தலை நேராக்க முடியை அயர்ன் செய்து, பின்னர் டிரையரில் உலர்த்தி குச்சி குச்சியாக நேராக்குகின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பின்னர் கூந்தல் உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.
கூந்தல் பாதிப்பு
ஸ்டைலுக்காக கூந்தலை நேராக்கும் போது ரசாயனங்களை கூந்தலில் பூசுவதாலும், டிரையர் உபயோகிப்பதாலும், கூந்தல் பாழகின்றது. இதையே வீட்டில் செய்யும் போது கூந்தல் பாதிக்கப்படுவது குறைகிறது.
எனவே கூந்தலை பாதுகாக்க அடிக்கடி டிரையர் உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதேசமயம் கூந்தலுக்கு எற்ற கண்டிசனர் உபயோகித்தால் நேராக்கும்வதற்காக அயர்ன் செய்யும் போது கூந்தல் உடைவது தடுக்கப்படுகிறது.
டீ டிகாஷன் ஒத்தடம்
ஸ்டெரெயிட்டனிங்’ செய்வதால், முடியானது ஆறே மாதத்தில் சுருங்கி, வலுவிழந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க... கொதிக்கும் டீ டிகாஷனில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, தலை முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். ஏ.சி-யிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலைமாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்னைகள் தீரும்.