FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 24, 2012, 09:42:34 PM
-
வேறு பாஷையில்
வேதம் படிக்கும்போது
காதுகள் ஊனம்
மொழிகள் வேறு
மனிதர்கள் ஒன்று
சந்திக்கும்போது
வாய்கள் ஊனம்
மறு தெருவுக்கு
மகிழ்வுந்தில்
வி.ஐ .பி.பயணம்
கால்கள் ஊனம்
வரட்டு கௌரவம்
வாழைபழம்
கரண்டியில் உரிப்பு
கைகள் ஊனம்
பஞ்சு மெத்தை
பட்டு விரிப்பு
நித்திரை
முத்திரை கொள்ளவில்லை
பணக்கார கண்கள் ஊனம்
கைகளில் முழம் போடும்
மதுரை மல்லி
மனமில்லை
விதவையின் ஜடை ஏற
தலை ஊனம்
வகை வகையாய் உணவு
தொகை தொகையாய் பணம்
நிறம் நிறமாய் ஆடை
இருந்தும் நடமாட
மருந்து மாத்திரை
அவனின் உயிரே ஊனம்
அருகில் ஒருவன்
பசித்து இருக்க-இவன்
புசித்துக்கொண்டு இருப்பான்
மொத்தத்தில் மனிதனே ஒரு ஊனம்தான்
Naan rasithathu
-
remo nala iruku enga sudara
-
engavathu padikuratha sudurathu than suthar:D
ithu than nu kuripitu sola mudiyathu pala idankal la padikurahtu