FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeSiNa on August 09, 2017, 05:40:31 PM

Title: ஒரு பெண்ணின் ஏக்கம்...
Post by: JeSiNa on August 09, 2017, 05:40:31 PM
வாழ்க்கை என்ற பயணத்தில் இரு இதயங்களை இணைக்க பெரியவர்களால் நிச்சையாக்க பட்டு  உறவுகளை ஒன்றாக இணைத்து மணமேடையில் மணமக்களை மனதார வாழ்த்தி மகிழ்ச்சியிலும் சோகங்களையும் ஒன்றாக இணைப்பதே திருமணம்..!

இரு இதயங்கள் இணைகிறது ஓர் இனம் புரியா
இன்பமும் அன்பும் காதலும் அங்கிருந்தே தொடங்குகிறது வாழ்வில் முதல்
படி இல்லறம்..!

தன் கணவனை பெற்ற
தாய் தந்தை இவளை பெற்ற அம்மா அப்பா போல் பார்த்து கொண்டால் பல கஷ்டங்கள் வந்த பின்னும் சகித்து கொண்டால் கணவனின் மேல் வைத்த அன்பினால்...

நாட்கள் ஓடின கேள்விகள் கிளம்பின.. நற்செய்தி  ஏதும் உண்டா....?

மூன்று மாதம் தொடங்கி மூன்று வருடம் ஆகின அவள்
வயிற்றில் ஒரு மாற்றமும் தெரிய வில்லை ஊர் வாய்கள் மூட வில்லை..

தன் கணவனிடம் இவளை விட்டு.. வேறு திருமணம் செய்துகொள் என்றனர்... கணவனோ சற்று தடுமாறினான்...!
அவனால் தன் மனைவியை விடுவதற்கு மனம் இல்லை...

கணவனின் தொழில் சாய்ந்து கண்ணீருடன் என்னால் உங்களுக்கு ஒரு வாரிசு தர முடியாதவள் என கவலையுடன் கூறினால்...

இதை பற்றி யோசித்து கொண்டே போனால் வாழ்க்கை ஓடி விடும்.. முடிவுக்கு கொண்டு
வருவது நம் கையீல் தான் இருக்கிறது மருத்துவரிடம்  அழோசிப்போம் கொழந்தை பெர்பதற்கு தகுதி இல்லை என்றால்....

வேறு மனம் அமைத்து கொழ்கிறேன்
உன்னுடன் என் வாழ்க்கையை முடித்து கொழ்கிறேன்...

கணவனின் வார்த்தைகளை கேட்டு அங்கையே சுக்கு நூறாக நொறுங்கினாள்...
பல சிகிச்சைகளை மேற்கொண்டால் பல மருத்துவர்களை ஆழோசித்தனர்.... அந்த பெண்ணிடம் ஒரு குறையும் இல்லை
என்றனர்.. பின்பு ஏன் கொழந்தை தங்க வில்லை...?

மருத்துவர் அவனை பரிசோதித்தனர்... முடிவாக ஆண்மை குறைவு ..!!

கவலை சூழ்ந்தது கணவனின் கண்ணீல்.. தன் கவனனிடம் ஏன் வாழ்க்கை முடியும் வரை உன்னை
காதலித்து அன்பு தொல்லை இடுவேன் ஏன் என்றால் என் முதல் குழந்தை நீ தான ட.. உன்னை விட்டு சென்றால் எந்தன் உயிர் என்னிடம் இல்லை...

கட்டி அணைத்து கண்ணீருடன் என்னை மன்னித்துவிடு உன் அன்பிற்கு நான் தகுதி அற்றவன் என்றான்...

என் வாழ்க்கையை உன்னிடம் குடுத்தேன் உன்னை யாரிடமும் விட்டு குடுக்க மாட்டேன் என்றால்...

காதல் நெருக்கமாகின... அன்பு இருவரிடமும் அதிகமாகின... சிகிச்சைகளை மேற்கொண்டான்.. மாதம் மாதம் ஏமாற்றம் ஒன்றே அவர்களிடம் மிஞ்சின...

தன் சகோதரியின் கொழந்தை அவளை அம்மா என்று அழைத்தான்... அவளுக்கோ தன் கொழந்தை எப்பொழுது தன்னை அம்மா என்று அழைக்கும்...?
ஒரு பெண்ணின் ஏக்கம்..!!!
Title: Re: ஒரு பெண்ணின் ஏக்கம்...
Post by: NiYa on August 09, 2017, 08:35:25 PM
alakana varikal tholi  
Title: Re: ஒரு பெண்ணின் ஏக்கம்...
Post by: ரித்திகா on August 12, 2017, 11:46:18 AM
வணக்கம் ஜெசி !!!

அருமை !!!
தொடரட்டும் பயணம் !!!
வாழ்த்துக்கள் !!!
Title: Re: ஒரு பெண்ணின் ஏக்கம்...
Post by: SunRisE on August 15, 2017, 01:29:11 AM
Vazhthukkal thozhi. Arumayana kavithai.