FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on August 08, 2017, 01:20:00 AM

Title: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 08, 2017, 01:20:00 AM
பலசரக்கு கடைக்கு
தன் நாயோடு
வந்த வாடிக்கையாளர்
தர வாரியாக
அடுக்கப்பட்ட தேனைப்பற்றி
விசாரித்தவர் சுவைப்பார்க்க
சிறிது கையில்
ஊற்றுமாறு கேட்க
கடைக்காரரும் ஊற்றினார்!

அதில் கொஞ்சமாய்
சுவைத்த வாடிக்கையாளர்
மீதியை கடைச்சுவற்றில்
தடவி விட்டார்!

அத்தடவப்பட்டத்தேனால் சில
ஈக்கள் ஈர்க்கப்பட்டு
மொய்க்க தொடங்கின!

அந்த ஈக்களை
பார்த்த பல்லி
அவைகளை பிடித்து
உண்ண மெதுவாய்
நெருங்கி கொண்டு இருந்தது!

அப்பல்லியை பார்த்த
கடைகாரரின் பூனை
அதனை பிடிக்க
ஆயத்தமாய் பதுங்கியது!

வாடிக்கையாளரோடு வந்த
நாய் பூனை
மீது கண்பதித்தபடி
காத்து இருந்தது!

ஈக்களை பல்லி
நெருங்க பதுங்கி
இருந்த பூனை
பல்லிமேல் பாய
கவனித்து கொண்டிருந்த
நாய் பூனையை
கவ்விட தாவ!

பூனையும் நாயும்
சண்டையிட,குறுக்கிட்ட
கடைக்காரரை கடித்து
குதறின!!!

கடைக்காரரின் இந்த
நிலைக்கு காரணம்
ஈக்களோ, பல்லியோ,
பூனையோ,நாயோ
அல்லது வாடிக்கையாளரோ
இல்லவே இல்லை!

வாடிக்கையாளரின் குணம்
அறியாது அவர்
கையில் கடைகாரர்
ஊற்றிய தேனே
காரணம் அதாவது
அவரின் இந்நிலைக்கு
அவரே காரணம்!

கருத்து:தகுதி இல்லாதவனுக்கு ஓட்டு போட்டு புலம்புவது!

தகுதி இல்லாதவர்களை காதலித்து ஏமாறுவது!

தகுதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது!

தகுதி இல்லாதவர்களோடு கொள்ளும் நட்பு!

இப்படி இன்னும் பல செயல்களை நாம் சரிவர சிந்திக்காமல்,ஆராயாமல்,செய்யும் பொழுது கடைக்காரரின் நிலை நமக்கு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை!

சிந்தித்து செயல்படுவோம்
நிம்மதியாய் வாழ்வோம்!
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: JeSiNa on August 09, 2017, 06:26:19 PM
kabaLi Nanba vazhgaila pala adigal vilunthirukum pola ::) ;D kathaiyai kavithaiyai karpitha kabaLi nanbanuku Vazhthugal... :)
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 10, 2017, 10:01:02 AM
Ama nan patta kastangal vera yarum pada kudathu le !
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: ரித்திகா on August 12, 2017, 11:44:41 AM
வணக்கம் கபாலி ...
 
உங்களின் கவி வடிவில்
அமைந்த கதை ...
மிக அருமை ...
அவசியமான கருத்தினை அழகாக
எளிமையாகவும் எழுதி உள்ளீர் ...
(இதுக்கு பேர்தான் ....!!!
தான் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகிறது  ;D ;D ;D )

அருமையான கவி சகோ !!!
அனைவரும் உணர வேண்டிய கவி ...!!!
தொடரட்டு கவிப்பயணம் !!!
வாழ்த்துக்கள் !!!
நன்றி !!!
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: SunRisE on August 15, 2017, 06:27:29 PM
Vanakkam kabali

Arumayana kathai. Kavithai vadivil vazhthukkal
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 17, 2017, 09:43:28 AM
Anaivarukum enathu an Anbana vanakkamum valthukalum!!