FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 07, 2017, 04:24:41 PM

Title: உனக்கானது எனது கவிதை
Post by: thamilan on August 07, 2017, 04:24:41 PM
உன்னை நினைத்து
நான் எழுதும் வரிகள் சில வேளை
கிறுக்கல்கள் ஆகிவிடுகின்றன
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல

என் வரிகளை
கவிதைகள் என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை 
மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ 
முட்டாள் என்பாயோ
இல்லை
வேறெதுவாகிலும் சொல்வாயோ

எதுவாகினும்
சொல்லிப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன்
என்றும்!!!!!!
Title: Re: உனக்கானது எனது கவிதை
Post by: joker on August 07, 2017, 05:05:26 PM
சொல்லிடும் காலம்
விரைவில் வர பிரார்த்திக்கிறேன்

அதுவரை மனம் பிரளாமல்இருங்கள்  :D :D :D

வாழ்த்துக்கள்

Title: Re: உனக்கானது எனது கவிதை
Post by: JeSiNa on August 09, 2017, 06:35:34 PM
thamilan anna yaru antha anni ::) pvtla sollunga ;) kavithaiyil kadhal kadhakali Aaduthu Anna.. Ithai padithuvittu anni kk soliduvanga na u dont wry ... ;D ungal kanavu kadhalai ninaivaaka allahta duah seiren thamilan anna...  :)
Title: Re: உனக்கானது எனது கவிதை
Post by: SweeTie on August 14, 2017, 01:40:31 AM
அதிகமான வேளைகளில்  அவை கிறுக்கல்கள் தான். கவிதை என்றாலே கிறுக்கல்தானே.   அதிலும் ஒரு பெண்ணையோ  அல்லது  ஆணையோ  நினைத்து கிறுக்கினால்   அது நிட்ச்சியம் பிதற்றல் தான்.  .  .கவிதை  அருமை.
Title: Re: உனக்கானது எனது கவிதை
Post by: SunRisE on August 15, 2017, 01:38:35 AM
Kirukkalkal kavigarin kaivannam
Ungalathu kaivannam
Thoothupogattum
Kirukkalgal anbu palamaga vazhthukkal thamizha