FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: HBK on July 31, 2017, 07:09:58 PM
-
முகிலுக்கு கண்கள் வைத்து!
இரவுக்கு கூந்தல் வைத்து!
நிலவென முகம் படைத்து
நட்ச்சத்திரப் பூக்கள் சூடி!
மண்ணுலகு மடியாகி!
விண்ணுலகுக் கொடியாகி!
சுவாசத்துக்கு மரங்கள்!
வாசத்துக்கு மலர்கள்!
சுற்றி வரக் குருவி!
தூரலிடும் அருவி!
வற்றாத உதிரக் கடல்!
சொட்டாதப் பனிமலை!
அந்தரத்து விண்ணுலகு!
விண்ணைத் தொடும் மலை அழகு!
சேவல் விடியல்!
காக்கையின் கரையல்!
சிட்டுக்குருவி இசை!
நீராட வான் மழை!
நிழலாட ஆதவன்!
இதழ் சுவைக்கத் தேனி!
வண்ணத்துப் பூச்சி ஓவியம்!
(விதை விதைக்கும் விவசாயி
பழம் சுவைக்கும் பறவைகள்)
பாதையிடும் பாம்புகள்!
ஓலம் யிடும் தவளைகள்!
ஓடி ஒளியும் எலிகள்!
கூடி மகிழும் காக்கைகள்!
(தாய்மையுடன் குரங்கு
தாலாட்டும் மரம்)
கோவப் படும் சிங்கம்!
சிவந்தக் கோவைப் பழம்!
கொக்குகள் நீதிபதி!
மீன்கள் குற்றவாளி!
பதுங்கிவிடும் நண்டு!
பாய்ந்திடும் புலி!
திருட்டு நரி!
இருள் விழி ஆந்தை!
உளவாளிக் கழுகு!
ஊர் சுற்றும் தென்றல்!
இல்லம் சுமக்கும் ஆமை!
திரவம் சுரக்கும் நத்தை!
பாறையிலும் மரங்கள்!
பாதையிலும் மரங்கள்!
வரிசையில் எரும்பு!
மழைக்கு காளான் குடை!
ஒளிமயம் மின்மினிப்பூச்சி!
தீ பரப்பாதக் கர்க்கள்!
பிச்சையெடுக்காத யானை!
பாரம் சுமக்காதக் காளை!
மலத்தில் உழாதப் பன்றிகள்!
களையெடுக்காதப் புள்வெளி!
வணங்கி நிற்க்கும் பனைமரம்
ஆவாரம்பூ அழகு!
சண்டையிடும் ஆடுகள்!
துள்ளி விளையாடும் கன்றுகள்!
வேடிக்கை இல்லாத மயில்கள் ஆட்டம்!
கலையாதச் சிலந்தி சதிகாரச் சிலந்தி!
சாதிக்கத் தூக்கனாங்குருவி!
பொருமைக்கு மீன்கொத்திப் பறவை!
இரவும் பகலும் வரிக்குதிரை!
மனிதனைச் சுமக்காதக் குதிரைகள்!
ஒட்டகம் ஒய்யாரம்!
உச்சி முகரும் ஒட்டகசிவிங்கி!
பேச முடியாத மனிதக்குரங்கு!
அடைப் படாத வண்ணக்கிளிகள்!
சிறைப் படாத வண்ணமீன்கள்!
வேட்டையாடாதப் பறவைகள்!
இரத்தம் படியாதப் புறாக்கள்!
கிரிடம் இழக்காத மான்கள்!
கொலைச் செய்யாத மரங்கள்!
ஆடையாகதப் பட்டுப் புழு!
வண்டுகள் ரீங்காரம்!
வெட்டுக்கிளி கானம்!
பந்தியில் இல்லாத வாழைமரம்!
ரசிக்காத வானவில்!
ருசிக்காத மனித வாடை!
மகிழம் பூ வாசம்!
மகிழவே அழியாத ஆறுகளும் உண்டு!
விண் கர்க்கள் விழுந்து வெட்டியக் குளம்!
உணவுக்கு மட்டுமே வேட்டை!
ஒவ்வொன்றும் அதிசயம்!
இயற்கையின் சுவாரசியம்!
அழியாத வ(ள)னங்கள்
அழியாத இன்னும் பல இனங்கள்!
படைத்துச் சென்ற இயற்கையை
மனிதன் படையல் போட்டு உன்னவா?
விண்ணுலகம் போகும் மதிக் கெட்ட
மனிதர்கள் வாழும் இயற்கை
பூமியில் இவை வாழ்வது அதிசயமே!
மனிதன் இல்லாத பூமியில்
இவைகள் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?
-
அழகான வரிகள்
எல்லவரிகளும் இயற்கையை அவ்வளவு அழகாக வர்ணிக்கிறது
ஒவ்வரு வரிகளும் அவ்வளவு தத்துரூபமாக அமைந்துள்ளது நண்பா
உங்கள் எழுத்து அருமை
வாழ்த்துக்கள் நண்பா