FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on July 30, 2017, 05:28:49 AM
-
மந்தாரை பூக்கள் கூட்டம்
மகிழ்வித்தது
மனதில் என்னை
மயங்கும் நிலையில் நான்
அதனை தாங்கி நிர்க்கும்
நீரோடையில் நிலையிலந்த
சருகாய் மூழகிப் போனேன்
பூக்களின் இதழ் தொட்டு
கைகளில் ஏந்தி
காத்திருந்த நேரங்களில்
அள்ளி சொருகிய கூந்தல்
அரை வட்டம் இட்டு
அடங்க மறுத்து
நானம் கொன்ட
நானல் போல்
வளைந்து தரிந்து
வட்டமடிக்கையில்
தெட்டி தெரிந்து
ஓடும் நீர்த்துளிகள்
மயஙகிப் போன
என் கண்களை
விழி மூட மறந்து
நிலை கொன்டன
என் நத்திரை கலைந்து
ஆம் இது கணவே
என விழத்துக் கொன்ட
எனது விழிகள்
அவள் முகம் தேடி
தோற்றுப் போனது
யாரவள் என அறியாமல்.......