FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: HBK on July 21, 2017, 04:35:21 PM
-
இன்னும் எத்தனை நாள்
என் காத்திருப்பு... உனக்காக ...
தவறிழைத்தவன் நான்தானா?
நெஞ்சை தொட்டு சொல் ...
பிரிவுக்கு காரணம் யார் என்று?
என்னை விட்டு போனது நீ?
வாழ்க்கை கடலில் சிக்கிய
சிறு துரும்பாய்....
தவிப்பது நான் மட்டுமே....
அன்பை தேடி...
அரவணைப்பை தேடி...
தேடியது கிடைக்காது...
மூழ்கினேன்... மூச்சடங்கி....
விடவும் முடியாமல்...
உன் நினைவுகளை விடவும் முடியாமல்....
தொடரவும் முடியாமல்...
வானகம் நோக்கி
உன்னை தொடரவும் முடியாமல்...
நினைவுகளும்... கனவுகளும்....
இரவுகளும்... இளமையும் ...
விரகமும்... நரகமாய்...
நாளெலாம் தீ மிதிப்பது போல...
கொப்பளித்தது கால்களல்ல...
இதயம்...
உன் பிரிவில்...
என் இதயம் வலிக்காமல்...
என்னை தாங்கி நிற்கும்
என் நட்புக்கள்...
வாழ்வலையில் சிக்கி...
விலகி திரியும்போது...
விலகாமல் இருக்க போவது...
உன் நினைவலைகள் மட்டுமே...
உடன்கட்டை ஏற
துணிவில்லை எனக்கு,
உன்னை மறக்க
உளமில்லை எனக்கு...
வருவேன் உன்னை தேடி...
வாழ்கை முடிவில்....
காலம் போயிற்றே என்று...
கதவடைக்காதே கண்ணே ...
மற்றோர் உலகத்தில்...
மகிழ்ச்சியான...
வாழ்க்கை...
நமக்காக...நாமே
நம்முடன்...நாமே
நான் வரும்வரை...
காத்திரு....
காத்திருத்தல்..
காதலில்...
சுகமே....
காதலர்....
இருந்தாலும்...
இல்லையென்றாலும் ...
காதல் காதலே...
வெற்றி காதலுக்கே.......................................
-
Vanakam HBK :)
arumaiyaana kavithai.. vazhthukal ..
elimaiyaana varigal la azhamaana unarvugal..
விடவும் முடியாமல்...
உன் நினைவுகளை விடவும் முடியாமல்....
தொடரவும் முடியாமல்...
வானகம் நோக்கி
உன்னை தொடரவும் முடியாமல்...
நினைவுகளும்... கனவுகளும்....
இரவுகளும்... இளமையும் ...
விரகமும்... நரகமாய்...
நாளெலாம் தீ மிதிப்பது போல...
கொப்பளித்தது கால்களல்ல...
இதயம்...
manathai kanaka seiyum varigal..
muthal kavithaiye asathal ah iruku..
thodarnthu ezhuthunga..
thodaratum kavipayanam :)
-
nanbaa
ethir parkvaillai ivaranan oru kaviyai unkalidam irunthu
vali mukntha kavi nanba
kathaluku tholvi illai
kathu irupadthu valikal mikuntha sukam than
valthukal nanba
-
வணக்கம் சகோ ...
காதல் அது வென்றாலும் தோற்றாலும்
காதல் காதலே ....
அழகான கவிதை கவிஞரே ...!!!
வரிகள் அனைத்தும்
படிக்கையில் மெய்சிலிர்க்க செய்கிறது !!!!
''வருவேன் உன்னை தேடி...
வாழ்கை முடிவில்....
காலம் போயிற்றே என்று...
கதவடைக்காதே கண்ணே ...
மற்றோர் உலகத்தில்...
மகிழ்ச்சியான...
வாழ்க்கை...
நமக்காக...நாமே
நம்முடன்...நாமே
நான் வரும்வரை...
காத்திரு....
காத்திருத்தல்..
காதலில்...
சுகமே.... ''
அழகான வரிகள் ...
காதல் பிரிவினை பரிசளித்தாலும்...
ஒரு நாள் நிச்சயம் உன் கரம் பற்றுவேன்
எனும் உங்களின் இந்த
நம்பிக்கையான சிந்தனை
சிறப்பு ...
கவிஞரின் கவிப்பயணம்
தொடரட்டும் ...
வாழ்த்துக்கள் சகோ ..!!!