FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2017, 07:57:04 PM
-
வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fvegetable-manchurian-dry-tamil-recipevegetable-manchurian-balls-seivathu-epppdivegetable-manchurian-balls-samayalvegetable-manchurian-balls-in-tamil-e1449651320610.jpg&hash=859785f8964e594e9fd43cb117426885d23b5944)
தேவையானவை:
துருவிய கேரட் – அரை கப், நறுக்கிய கோஸ் – அரை கப், பொடியாக நறுக்கிய குடமிளாகாய், பீன்ஸ் – தலா கால் கப், நறுக்கிய வெங்காயம் – 2, சோள மாவு – அரை கப், மைதா மாவு – அரை கப், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், வெங்காயத்தாள் – அலங்கரிக்க, பூண்டு – 3 பல், பச்சைமிளகாய் – 3, எண்ணெய் – பொரிக்க, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டு, பச்சை மிளகாயை நசுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன், நறுக்கிய காய்கறிகள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுங்கள். வெங்காயத்தாளால் அலங்கரித்து பரிமாறுங்கள்