FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2017, 07:43:30 PM

Title: ~ பன்னீர் மஞ்சூரியன் ~
Post by: MysteRy on July 07, 2017, 07:43:30 PM
பன்னீர் மஞ்சூரியன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fpaneer-manchurian-recipe-cooking-tips-tamilpaneer-manchurian-samayal-kurippupaneer-manchurian-tamil-languagepaneer-manchurian-cooking-tamil-e1449651014288.jpg&hash=bef874b3509b161fbe17185d66ad1f14366e3553)

தேவையான பொருட்கள்:

 பன்னீர் – 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) குடைமிளகாய் – 2 (நறுக்கியது) சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 3 பற்கள் (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – 1 கப் செய்முறை: ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.


பின்னர் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ண்ய ஊற்றி, பன்னீர் துண்டுகளை 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கி, அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு பூண்டு, குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். அடுத்து சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு மீதமுள்ள சோளமாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, நீர் வற்றும் வரை மென்மையாக பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
Title: Re: ~ பன்னீர் மஞ்சூரியன் ~
Post by: SwarNa on August 04, 2017, 09:29:31 PM
ty sis :) seyavendiya list + d
Title: Re: ~ பன்னீர் மஞ்சூரியன் ~
Post by: MysteRy on August 04, 2017, 10:14:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2FREPLY%2Fswarsenji.jpg&hash=88a9e8aa0f57333c7a151a5a4dc8d922f8ea7769)