FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 05, 2017, 11:29:15 PM
-
சைனீஸ் நூடுல்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2FChinese-noodles-cooking-tips-in-tamilChinese-noodles-samayal-kurippuChinese-noodles-in-tamilChinese-n.jpg&hash=38d81419cb392dcbba7d7e3f3c9fc23da88d24c0)
நூடுல்ஸ் 100 கிராம்
கேரட்1கப் (வெட்டப்பட்டது)
வெங்காயத்தாள்-2 தண்டுகள்(நறுக்கப்பட்டது)
பீன்ஸ், 1/2 கப் (நறுக்கப்பட்டது)
குடைமிளகாய்-2 (நறுக்கப்பட்டது)
மிளகுத்தூள்-2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
சோயா சாஸ், 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-நறுக்கப்பட்டது
உப்பு-தேவைக்கேற்ப
நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது. கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த காய்கறி கலவையை வேகவைத்த நூடுஸ்சுடன் சேர்க்கவும். ஒரு கடாயில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் சூடு படுத்தவும் அதனுடன் குடைமிளகாய், சோயா சாஸ் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் நூடுல்ஸ் மற்றும் காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும். சைனீஸ் நூடுல்ஸ் ரெடி…