FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 05, 2017, 11:15:22 PM

Title: ~ சைனீஸ் புலாவ் ~
Post by: MysteRy on July 05, 2017, 11:15:22 PM
சைனீஸ் புலாவ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2FChinese-Pulao-Recipe-in-tamilChinese-Pulao-recipe-samayal-kurippuChinese-recipe-in-tamilChinese-recipe-tamil-fontChinese-recipe-list-in-tamil-e1447662285544.jpg&hash=30f5bafbe0c3db452c027fad3c6ca522fd100c4d)

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி : 1 ஆழாக்கு
குடை மிளகாய் : 1
காரட் : 1
பீன்ஸ் : 100 கிராம்
கோஸ் : 100 கிராம் (துருவியது)
புதினா : 1 கட்டு (சிறியது)
பச்சைமிளகாய் : 5
வெள்ளை மிளகுபொடி : 1 டீஸ்பூன்
அஜினோ மோட்டோ : 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் : தேவையான அளவு

 
செய்முறை

அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும். சாதம் உதிராக இருக்க வேண்டும். காய்கறிகளை 1 அங்குல நீளத்திற்கு நறுக்கி, பச்சைமிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு வதக்கவும். பின்னர் காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து ஒரு தடைவ புரட்டி ஆறிய சாதத்தில் கொட்டவும்.

அஜினோ மோட்டோ, வெள்ளை மிளகு பொடியும் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். சைனீஸ் புலாவ் ரெடி.