FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on June 27, 2017, 04:34:19 PM

Title: தோழி!
Post by: ChuMMa on June 27, 2017, 04:34:19 PM
மல்லி மலரும் அதிகாலை..
அல்லி மலரும் அந்திவேளை...
இடைப் பட்ட அந்த நேரம்.
நம் சந்திப்பு நடை பெற்ற நேரம்

எத்தனை உறவுகள்
தேடாமல் கிடைத்திருந்தாலும்
தேடிக்கிடைத்த உன்னை
விட்டு செல்ல விரும்பவில்லை
பிரிந்து செல்ல பிடிக்கவில்லை

உன்னைப் போல் ஒரு உறவு
தேடினாலும் கிடைக்காது

நான் ஆண், நீ பெண் என்பதால்
ஊர் சொல்லும் ஓராயிரம் உறவுகள்
நம்மைபற்றி

என்னை பற்றி நீ சிந்திப்பாய் அதிகமாய்
என் கவலையும் சந்தோஷமும் உன்னையும்
தொற்றிக்கொள்ளும் நான் சொல்லாமலே

நம்மை பற்றி ஊர் சொல்லுவது நமக்கு
கவலை இல்லை இருந்தும் உன் எதிர்காலம்
என்னை கவலை கொள்ள செய்கிறது

என்னால் அது சிதைந்தால் தாங்கும் சக்தி எனக்கில்லை
ஆதாலால் சரியோ தவறோ இந்த முடிவு
உன்னை விட்டு விலகி இருக்க

என் நண்பர்களின் பெயரில் என்றும்
முதலில் உன் பெயர் தான் இருக்கும்
என் அன்பு தோழியே !

Title: Re: தோழி!
Post by: NiYa on June 28, 2017, 06:57:23 AM
அருமை நண்பா

"என்னை பற்றி நீ சிந்திப்பாய் அதிகமாய்
என் கவலையும் சந்தோஷமும் உன்னையும்
தொற்றிக்கொள்ளும் நான் சொல்லாமலே"

உண்மையான நட்பில் இது சாத்தியமே 
 
Title: Re: தோழி!
Post by: SunRisE on June 28, 2017, 08:17:24 AM
Arumaiyana kavithai chumma nanbare.

Thozhi enbaval pen mattumalla
Thaimayum Natbu kalantha
Uyirulla oor ooviyam
Ethai perukku amaiyum
Thozhiyin thunai
Anbil  annayaga
Aravanaippil thanthayaga
Nesathil thozhanaga

Pennukku unnal perumai endraal
Athu UN thozhi meethu
Nee vaitha nesam
Petridatha maganin innoru thaai enpen


Title: Re: தோழி!
Post by: ChuMMa on June 28, 2017, 11:43:56 AM
நன்றி நியா
நன்றி சன்ரைஸ்

ஆம்
தோழி தாயை  போன்றவள் தான்
அனுபவித்தவன் நான் அந்த அன்பை

அவளுக்கும் வாழ்க்கை உண்டு என்று என்னும் போது
சில முடிவுகள் தவிர்க்க முடியாததாய் ஆகிறது ..


Title: Re: தோழி!
Post by: ரித்திகா on June 30, 2017, 11:01:03 AM
(https://s22.postimg.org/c96nw85ap/chummm.jpg)
Title: Re: தோழி!
Post by: ChuMMa on June 30, 2017, 12:55:38 PM
Nandri Thangachi...


Etharkum oru ellai undu.....etharkum oru vilai undu ..