FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 26, 2017, 01:46:55 AM
-
மாற்றம் என்பது வாழ்விலே
பலமுறைகள் வந்து போகும்
விதி என்பதை எண்ணி
வீண் போகும் மனது
உன் மதி எனும் உழைப்பை
மறந்திட செய்யும் மயக்கம்
கடவுளே மூன்றாவது
கண் காட்டி
மறுமுகம் செய்தாலும்
மறுக்கும் மானிடனா
நீதான் கடவுள் மதிக்கும்
உத்தமன் ஆவாய்
கடவுளின் பெயர் சொல்லி
உழைக்க மறந்துமதில் மேல்
பூனை ஆகி
மற்றவரின் உழைப்பை சுரண்டும்
மானிடன்
நரகத்தின் நுழைவாசல்
தேடுகிறான்
உழைப்பை மட்டும்
நம்பும் விவசாயி
அவன் வடிக்கும்
நெற்றி வியர்வைக்கு
விலை கேட்பதில்லை
சாக்கடை அல்லும் தொழிலாளி
தரம் பிரிப்பதில்லை
தன் தகுதி இழப்பதில்லை
தன்மானதுக்கு
நாளும் செய்யும்
நன் கடமைகள்
பல உண்டு
அவர் எவரும்
நான் எனும்
கர்வம் கொண்டதில்லை
ஒரு நொடியில்
உறைந்து
மரு நொடிகளில்
நாறதுடிக்கும்
நீ ஏன்
கர்வம் கொள்கிறாய்
நான் என்று
உனக்காக வாழும்
உன்னை நேசி
பின்பு
உன்னை நேசிப்பவரை
நீ நேசிப்பாய்
இகழ்ச்சி இல்லாது
மனது வை மனமே
மற்றவரின் வெற்றிக்கு
பாராட்டு சொல்
அந்த பாராட்டு
பின்னாளில்
உனது வெற்றி படிக்கட்டுகள்
ஆகும்...
இகழ்ந்து பேசாதே
அது கடந்து போய்
மீண்டும் உன்னோடு
பயணம் செய்யும்
மற்றம் ஒன்றே
மகத்துவம்
-
அருமை தோழா
ஆழமான வரிகள்
நான் என்ற ஆணவம் தான் எல்லா
தீமைக்கும் காரணம்
"
உனக்காக வாழும்
உன்னை நேசி
பின்பு
உன்னை நேசிப்பவரை
நீ நேசிப்பாய்
இகழ்ச்சி இல்லாது"
அருமை
மாற்றமே மகத்துவம் நண்பா
-
Nanri thozhi niya
Silar poramai
Thevaillatha kopam
Anumaana santhegam
Ithuthan vazhgai ena
Vazhpavaruku
Matravarin vali
Theriyala vaaipillai
Palarukku purivathillai
Unmayana anbu ethu
Nermayana pasam ethu
Unmayana vazhkai ethu
Endru
Than piditha muyal
Moondru kaal
Ena koochal podum
Nallavargal
Avargalukku intha kavithai samarppanam