FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 25, 2017, 11:12:38 PM

Title: நேர்மை
Post by: SunRisE on June 25, 2017, 11:12:38 PM
என்ன தான் நடக்குது நாட்டுல?....
ஒன்னும் புரியல மொத்ததுல....
புரிந்து முயற்சித்தால் எப்படினுதான் தெரியல குழப்பத்தால.....

அட அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்ற சிந்தனையில் நாட்களும் நகருதே படிப்படியா....
ஆக எதுமே செய்யல உருப்படியா.....
எல்லாமே நடக்குது குளறுபடியா.....
எப்போதான் வாழுறது உலகமே ஒற்றுமைப் பண் பாடும்படியா?......

இலவசமாக கிடைப்பதால் தானோ தாயின் அன்பிற்கு மதிப்பில்லையோ??....
பிறந்தது முதல் பெரிய மனிஷனாக்கி கால் கட்டுமிட்டு சுயமாக உழைக்கும் வரை பட்டியல் போட்டு பணம் கேட்டால் தாயின் அன்பிற்கும் சிறப்பாகுமோ???....

தெளிவைத் தேடிப் பாடுகிறேன், குழப்பமான வரிகளாலே....
தெளிவு என்று தான் காணக் கிடைக்குமோ நம் செயல்களிலே.....

நேரமின்மையால் நேர்மை தவறலாமோ???....
கொடுத்ததாகக் கணக்குக் காட்டி தனக்கென எடுக்கலாமோ???.....
தன்னம்பிக்கையில்லாமல் தன் வாயில் வந்தபடி புளுகி பணத்தைச் சேர்த்துதான் என்ன பயன்???.....

குழப்பம் தீரக் குழப்பத்தை விரட்டி சுடர்மிகு பகுத்தறிவு ஒளிர்ந்திட வேண்டும்...
தனக்கென தானே நடந்து செல்ல நல்லறமென்னும் பாதையை செப்பணிட சீர்திருத்தி அமைத்திட வேண்டும்....

தலை நிமிர்ந்து நேர்வழியில் சென்றிட வேண்டும்....
Title: Re: நேர்மை
Post by: SweeTie on June 26, 2017, 12:42:56 AM
மாற்றான்  முற்றத்தின்  மல்லிகையின்  மணம்  வீசுகிறது.
தலை நிமிர்ந்து நேர்வழியில் சென்றிட வேண்டும்..
அருமையான வரிகள். 
படித்ததில் பிடித்ததை  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. 
Title: Re: நேர்மை
Post by: SunRisE on June 26, 2017, 01:11:09 AM
Nanri thozhi sweeti
Title: Re: நேர்மை
Post by: NiYa on June 28, 2017, 07:02:29 AM
"இலவசமாக கிடைப்பதால் தானோ
தாயின் அன்பிற்கு மதிப்பில்லையோ??....
பிறந்தது முதல் பெரிய மனிஷனாக்கி கால் கட்டுமிட்டு
சுயமாக உழைக்கும் வரை பட்டியல் போட்டு பணம்
கேட்டால் தாயின் அன்பிற்கும் சிறப்பாகுமோ???.."..  

அழகான வரிகள்
உணர்வுபுர்வமான கவி
Title: Re: நேர்மை
Post by: SunRisE on June 28, 2017, 08:02:03 AM
Nanri thozhi niya