FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 24, 2017, 09:53:20 PM
-
வரிகளை வாரிதந்த வள்ளல் இவன்
எதுகையை ஏந்திவந்த என் இறைவன்
அனுபவித்தே அவன் பாடல் சொன்னான்
அதனாலே இவன் நெஞ்சில் நின்னான்
ஆறிய காயம் ஆயிரம் கண்டும்
சீரிய வாளாய் சிரிப்பை தந்தான்
துக்கமும் அவனை காதலிக்கும்
துவண்டவனில்லை என் தலைவன்
கண்ணால் பேசிய
கண்ணனின் கை ஆள்
பட்டதை சொல்வோர் மத்தியிலே
தொட்டதை சொன்ன முதல் மனிதன்
தொட்டதை கூட சொல்லிவிட்டு
விட்டதை சொல்லி வியக்கவைத்தான்
வியப்பாய் நின்று பார்க்கையிலே
பொருப்பாய் இரு என
போய் மறைந்தான்
என் கை பேனாவின் மைத்துளியில்
சக்திராகவா
(https://s18.postimg.org/wfrsx4v0l/IMG_3245.jpg) (https://postimg.org/image/wfrsx4v0l/)
-
சக்தி நண்பா
கவி அருமை
நானும் கண்ணதாசனின் கவிகண்டு வியந்திருக்கின்றேன்
அருமையான கவிகள் அனைத்தும்
-
நன்றி தோழி என் தலைவன் தவறிவிடுவேனா வாழ்த்தாமல் அதுதான்