FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 24, 2017, 02:59:01 PM
-
பக்கம் பக்கமாய்
கவிதை எழுதுகிறேன் உன்
பக்கத்தில் அமர காத்திருக்கிறேன்
வெட்கம் உனக்கு அழகு
என்னிடத்தில்
தர்க்கம் செய்யும்
வேளையிலோ
பேரழகு
மல்லி சூடிடும்
இன்ப வள்ளியே
உன் கள்ளப்
புன்னகையைக் கண்டு
கரைந்து போகிறேன்
நானடி.
தேடாதோ உன்
இரு விழி என்னைத்
தேடாதோ.
தீராதோ
உன்னைத் தேடித்தேடியே
என் விழியின் வலி
தீராதோ.
பாடாதோ
காதல் ராகத்தை
உன் மனம் பாடாதோ.
என் காதலை
உன்னிடம்
சொல்ல முனைவதும்
அதனை நீ
மறுப்பதும்
வாடிக்கை
மற்றவற்கோ
இது வேடிக்கை
வேடிக்கை வாடிக்கை
ஆகலாம்
என்னோடு நீ
வரும் நாள்
வெறும் காட்சி ஆகாமல்
காலம் வெல்லுமா
உன்னோடு நானிருந்தால்.....
-
vanakam sunrise :)
kavithai super..
intha varigal semmaiya iruku .. :)
தேடாதோ உன்
இரு விழி என்னைத்
தேடாதோ.
தீராதோ
உன்னைத் தேடித்தேடியே
என் விழியின் வலி
தீராதோ.
பாடாதோ
காதல் ராகத்தை
உன் மனம் பாடாதோ.
என் காதலை
உன்னிடம்
சொல்ல முனைவதும்
அதனை நீ
மறுப்பதும்
வாடிக்கை
மற்றவற்கோ
இது வேடிக்கை
-
சன் எங்கே காணாமல் போனீர்கள்.? கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்.