FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on February 21, 2012, 07:27:51 PM
-
கவிதை எழுத
காகிதத்தை எடுத்தேன்
கரண்ட் கட் ஆனது
2 மணி நேர மின்தடைக்கே
பட்டணத்தில் படாத பாடு என்றால்
என் பாமரனுக்கோ
8 மணி நேர மின்தடை
அறிக்கையில் சொன்னதுபோல்
அனைத்தும் இலவசம்
மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்- ஆனால்
மின்சாரம் மட்டும் கிடையாது (நாங்களும் யோசிப்போம்ல!!)
இலவச மின்சாரம்
எளியவனுக்கு உண்டு (மகனே கரண்ட் இருந்தாதான!!)
காதலர் தினத்தன்று
காதலிக்கு பரிசு
கலர் கலராய் கை விசிறி
இப்போதெல்லாம் காத்தாடி வாங்கினால்
கைக்குட்டை மூன்று இலவசம்
இருட்டில் தான் பேய்கள் வாழும் என்றால்
இருட்டில் வாழ பழகி கொள்ளுங்கள்
மனித பேய்களா!!
-
நல்ல கவிதை ஜாவா! இன்று தமிழகத்தில் அனைவரும் படும் அவஸ்த்தை இந்த மின் தடை இதை பற்றிய ஒரு கவிதை மட்டும் அல்ல சிந்திக்க தூண்டும் விடயமும் கூட. இலவசங்களுக்கு அடிமையாகிப்போன இந்த தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
-
Nalla samayosidha sindhanaiyudan,samudhaaya akkariyum sama alavu nagaichuvaiyodu kalandha padhippu.....!
Vaazhthukkal !
-
jawa nala kavithai varigal tamil nadu problem ah azhaga solitinga unga varigala really nice
-
இருட்டில் வாழ பழகி கொள்ளுங்கள்
மனித பேய்களா!!
Ithai vida minsaarathai veenakamal iruka palakina kuda pothum Jawa
nice poem.
padum avasthaiyai alaga solirukinga
காதலர் தினத்தன்று
காதலிக்கு பரிசு
கலர் கலராய் கை விசிறி
intha varikalai nan migavum rasithen
-
nalla kavithai, ippo trendu ku updated a iruku.vaazthukkal!!"iruttil vaaza pazakikollungal "
nalla arivurai ,arumaiyana vari.
-
காதலர் தினத்தன்று
காதலிக்கு பரிசு
கலர் கலராய் கை விசிறி
இப்போதெல்லாம் காத்தாடி வாங்கினால்
கைக்குட்டை மூன்று இலவசம்
மின் தடைக்கு நகைச்சுவை போல நல கவிதை ஜவா.... கை குட்டை பத்திரம் பயன்படும் எதிர் காலத்தில்
-
Hi Friends Thank U For All Ur Wishes ANd Comments...
-
jawahar nala soli iruka nanba
unaku iyarkaiyilaeye nagaikkum thiran undu polum