FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on February 21, 2012, 06:14:32 PM

Title: இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?
Post by: Yousuf on February 21, 2012, 06:14:32 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Us6s2ymvwXs%2FTzh-VVJkxYI%2FAAAAAAAAGyQ%2FoJREX8Psf3c%2Fs200%2Fsinthikkavum.jpg&hash=322af2f2e4cc369b944c327e2c6c2a3d5762560f)

இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அப்பாவி மக்கள் ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் போடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு ஒடுக்கும். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு பயங்கரவாத படைகளான போலீஸ் மற்றும் ராணுவம் ஏவி விடப்படும். ஆனால் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் ஒரே நாளில் 44 அப்பாவி மக்களை கொன்றவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இந்த வெள்ளை உடை தரித்த அழுக்கு பிடித்த கயவர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் 44 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பயங்கரவாதம்தான். மக்களுக்கு தேவையான உணவுகளை பதுக்கும் பதுக்கல் வியாபாரிகள், போலி மருந்துக்களை தயாரித்து மக்கள் உயிருக்கு உலைவைக்கும் மருந்து கம்பெனிகள், இதுபோன்று உயிர்காக்கும் பணிகளில் உள்ளவர்கள் செய்யும் வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கபடுவது ஏழை எளிய மக்களின் உயிர்களே. இந்த கயவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். செய்வார்களா இந்த போலி அரசியல்வாதிகள். இல்லையேல் மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வரவேண்டும்.
Title: Re: இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?
Post by: Global Angel on February 25, 2012, 09:03:35 PM
வைத்திய தொழிலை சேவையாக பார்க்கும் எவனும் இதுக்கு உடந்தையாக இருக்க மாட்டான் .... இவர்கள் எல்லாம் வெள்ளை உடை அணித காலன்
Title: Re: இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?
Post by: Yousuf on February 25, 2012, 09:59:43 PM
உங்கள் கருத்து உண்மைதான் ஏஞ்செல்!

நன்றி!