FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 18, 2017, 10:42:53 AM
-
வாழ்க்கைப் படிக்கட்டில்
ஒவ்வொரு படியாக ஏறுவதற்கு
பெற்றோர் என்ற ஏணியில்
சுலபமாக ஏறுகின்றோம்
அவர்களும் நம் குழந்தை என்ற
எண்ணத்தில் எல்லா துன்பத்தையும்
தாங்கி உயர்ந்த இடத்தில் நம்மை
நிறுத்தி அழகு பார்க்கின்றனர்
ஆனால் நம்மில் எத்தனைபேர்
அதை நினைத்து பார்க்கின்றோம்
என்பதே இங்கு கேள்விக்குறி
அதையும் தாண்டி எத்தனை
பேர் பராமரிப்பு செய்கிறார்கள்
என்பதே இன்னொரு கேள்விக்குறி
அப்படி செய்பவர் எத்தனைபேர்
உள்ளன்போடு செய்கிறார்கள்
என்பது இன்னொரு கேள்விக்குறி
ஏனென்றால் கடமைக்கு
செய்பவர்கள் தான் இங்கே அதிகம்
ஆக மொத்ததில் அவர்களுடைய
கடைசி காலம் என்பது பெரும் கேள்விக்குறி
(தாயும் தந்தையும் இருந்தால் எப்படியோ சமாளித்துவிடுகின்றனர்
தந்தை மட்டுமே என்றால்
அவர்களுடைய நிலைமை ரொம்ப பரிதாபம்)
அவர் உனக்காக வாழ்ந்தார்
என்பதை மறந்திடாதே!
-
ஆழமான உண்மையான வரிகள் நண்பா
-
Nanri thozhi niya
-
Sun anna ;D Azhagana kavithai :D Vazhthukkal anna ;D
-
Nanri vipu sis