FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 17, 2017, 11:04:39 PM

Title: அப்பா
Post by: NiYa on June 17, 2017, 11:04:39 PM
கருவறையில் சுமந்த அன்னை
மார்பறையில் தாங்கமுன்பே
இருகையேந்தி என்னை
தன் நெஞ்சறையில் தாங்கியவர்

என் பிஞ்சு கால்கள் உங்கள்
நெஞ்சை உதைத்தாலும்
அந்த நெஞ்சில் அணைத்தே
உறங்கவைப்பாய் என்னை

உன் கரம் பிடித்து நடக்கையில்
உள்ளத்தில் அச்சங்கள் விலகுகின்றன
நான் ஏடு எடுத்து பயில எத்தனை
இரவுகள் துயிலை தொலைத்தீர்கள்
ஒவ்வொரு இரவும் நீங்கள் தரும்
அந்த ஓற்றை  நெற்றி முத்தத்தில்
என் எல்லா சோகங்களும்
எல்லா கவலைகளும் தோல்விகளும் மறந்து போகிறது அப்பா

நான் பார்த்து ரசித்த முதல் ஆண்
நான் மனம்விட்டு பேசிய முதல் நண்பன்
நம் பாசம்  வாழ்நாள் முழுவதும் வருவது
என் தந்தைக்கு நான் என்றும் தாயாக இருப்பேன்
 
Title: Re: அப்பா
Post by: SunRisE on June 18, 2017, 03:00:49 AM
Thozhi Niya ,
ungal kavithai nadai elil
 
Enakku piditha varigal ippadi amainthaal super

இரவுகள் துயிலை தொலைத்தீர்கள்

ஒவ்வொரு இரவும் நீங்கள் தரும்
அந்த ஓற்றை  நெற்றி முத்தத்தில்
என் எல்லா சோகங்களும்
எல்லா கவலைகளும் தோல்விகளும் மறந்து போகிறது அப்பா

நான் பார்த்து ரசித்த முதல் ஆண்

Arumai  vazhthukkal thozhi