FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 17, 2017, 09:00:15 AM

Title: நல்லவர்கள்
Post by: SunRisE on June 17, 2017, 09:00:15 AM
ஆண் வர்க்கம் எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனம் கொண்டதால் என்னவோ
அவர்களுடன் உள்ள நட்பு கூட
சில காலத்திற்கு அப்புறம்
தவறாகவே செல்கின்றது..........

காரணம் ஏதும் இல்லை
விளக்கம் ஒன்றுதான்
நமது அன்றாட வாழ்க்கையின்
அறிவியலின் முன்னேற்றமே
எல்லோரும் சொல்லும் பதிலாக இருக்கலாம்...

உண்மை யாருக்கும் புடிப்பதில்லை
அதனால்தான் என்னவோ
பெண்ணின் சாதாரண உரையாடல்கூட
தவறாகவே தெரிகிறது
என்போன்ற பெரியவர்களுக்கு...

உடுத்தும் உடையில் இருந்து
பேசும் மொழி வரை
அத்தனை சுதந்திரம் கொடுத்த
நம்போன்ற பெரியவர்கள்

அவளின் பெண்மையின் தன்மைக்கு
அங்கீகாரம் கொடுக்க மறுப்பதினால்
என்னவோ அவளின் தோழமை நட்பைக்கூட
இந்த உலகம் பிழையாக பார்க்கிறது ...

பழித்து பேசும் உள்ளம் கொண்ட
என்போன்ற நல்லவர்களினால் என்னவோ
நட்பு கூட காதலாக மாறிவிடுகிறது

நம் மேல் பிழை வரும் என்பதினால் என்னவோ
எம்போன்ற நல்லவர்கள்
அதை காதலாக்கி கசக்குவதால்
நட்பு கூட பிழையாகிவிடுகிறது

தன் சொந்தங்களின் அரவணைப்பு
நம்மை விட்டு விலகும் போது
துடைக்கும் கையாக
கிடைக்கும் நட்பை
காதலென பேசிவிட்டு
செல்லும்
எம் போன்ற
நல்லவர்கள் இருக்கும் வரை
இந்த தூற்றுவதா
Title: Re: நல்லவர்கள்
Post by: SunRisE on June 18, 2017, 12:12:48 AM
இந்த கவிதை என் தோழி அவர்களுக்கு கவிதை போட்டியில் கலந்து கொள்ள நான் எழுதியது. முதல் பரிசும் வென்றது அதான் அந்த பகுதியில் அப்படியே எடுத்து இங்கே பாடப்பில்லை இருந்தேன். நன்றி