FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 13, 2017, 11:15:32 AM

Title: அரட்டை அரங்க காதல்
Post by: SunRisE on June 13, 2017, 11:15:32 AM
அரட்டை அரங்கம் உன்னால்
எனது அங்கமாக ஆனது
உனது வருகையால்   தித்திக்கின்றது
தினம் தினம்

உனது வருகை
விழிகளில் ஏக்கம்
மனதில் ஆசை
இதயத்தின் ஓசை
இவையனைத்தும்
இன்பத்தில் திளைக்கின்றது

கன்னி உந்தன்
வருகை அறிய
எனது இரு கண்கள்
உன் பெயர் தேடுதே

அத்தனை நண்பர்கள்
இருந்தபோதும்
நிலைக்க வில்லை
என் மனம்
லயிக்கவில்லை எதிலும்
உன் விலாசமின்றி

வருகை பதிவேற்றம்
வரவேற்குமா
உனது முகவரியை
என எதிர்பார்க்கும்
எனது இரு கண்கள்
மற்றவர் விலாசம்
காட்டும் முகவரியை
சபிக்கின்றது  கண்கள்
அவர்களை வரவேற்க
தோன்றாமல்
எனது இயல்பு நிலை
இடைவெளி காட்டுகிறதே

நண்பர்கள் பலர்
நலம் விசாரிக்கும் பொது
மறுமொழி கூறிட
முழிக்கின்றதே
எனது விரல் நுனிகள்

கணினியின் கண்கள்
தட்டச்சின் கைகள்
அவளின் பெயரை
கண்டிடவும் கேட்டிடவும்
இயலாது போன
இயலாமையை என்னி
என்னிடம்
கோபம் கொள்கின்றதே

அரட்டைகள் பல
அரங்கேறி
கேளிக்கைகளில்
கேள்விகளில்
அரங்கமே அதிர்ந்த போதும்
அதனை கண்டும்
காணாதது போல்
கோபம் கொள்கிறதே
மனம் காரணமின்றி

எப்போது வருவாள்
என் தேவதை
எங்கே தொலைந்து போனாள்
என் மனதை
அரட்டை அரங்கில்
அலைய விட்டு
வருவாளா? அவள்  வருவாளா??

கற்பனையுடன் உங்கள் சன் ரைஸ்
Title: Re: அரட்டை அரங்க காதல்
Post by: VipurThi on June 13, 2017, 12:43:48 PM
Sun anna :D kavithai super ;D but logic idikuthe ;D engayo vilunthutinga pola ;D  ;D ithu karpanai nu nan namba porathu illa :D
 கன்னி உந்தன்
வருகை அறிய
எனது இரு கண்கள்
உன் பெயர் தேடுதே

என் மனதை
அரட்டை அரங்கில்
அலைய விட்டு
வருவாளா?

Namma chat la than theduringala  :o ;D
 Ithu yar perunu kanudupidika CID ready panuran irunga ;D
Thodarnthu eluthunga sun anna ;D
Title: Re: அரட்டை அரங்க காதல்
Post by: SunRisE on June 13, 2017, 01:41:01 PM
Ha ha ha vipu ma karpanai than cid thevai illa sis. Thanks
Title: Re: அரட்டை அரங்க காதல்
Post by: SweeTie on June 13, 2017, 06:37:59 PM
உங்கள் அரட்டை அரங்க காதல்  வாழ்க.    சீக்கிரமே  அவள் பெயரைத் தெரிந்துகொள்ளுங்கள்.    கவிதை  சூப்பர்
Title: Re: அரட்டை அரங்க காதல்
Post by: SunRisE on June 13, 2017, 08:05:55 PM
Sweet friend aval varave mattal. Thanks ur comments friend