என் சகாரா பாலைவனக்களில்
பனி மழை
என் தொலைதூர பயணங்களின்
வழித்துணை
என் கருமை இரவுகளின்
விடிவெள்ளி
என் தனிமைக் கனவுகளின்
வழிகாட்டி
அடிக்கடி நான் பேசும் தத்துவங்களின்
ஆசான்
எப்போதாவது என் மௌனங்களின்
காரணம்
மறந்து போனதை மறக்காத
நாட்குறிப்பு
மனம் திறந்து நான் எழுதும்
டைரி
எனக்குப் பிடித்த பாடல்களின்
இசை
எழுதித் தீர்க்கும் கவிதைகளின்
மொழி
என்றுமே நான் தேடும்
நட்பு
எப்போதாவது எனக்கு வரும்
கோபம்
என்றும் என்னை நினைக்கும்
மனம்
என்றும் என்னுள் நிலைக்கும்
உயிர்
எப்போதோ நான் செய்த
தவம்
எப்போதும் நான் தீர்க்க முடியாத
கடன்
எல்லாம் நீயே
எந்தன் தாயே
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FmXZM1xJ.jpg&hash=ba70f0b2c900d6724e76251d48b8047b571b1d83)
Arumaiyana kavithai Thozhi... ithe Maari Neraiya Kavirhai Eluntha Enudaya Vazhthugal... :-*