தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 10, 2017, 09:06:05 PM
Title: நெகிழியில் நெல் வருமா??
Post by: சக்திராகவா on June 10, 2017, 09:06:05 PM
வீதிக்கு வந்த விவசாயிக்கு கை கொடுக்க யோசித்தால் வீட்டிற்கு அரிசியும் முட்டையும் நெகிழியில் வந்து நெருப்பினில் வெந்து தட்டில் தானே விழும்
மண்ணும் மரமும் நீரும் ஏரும் இன்றியமையாதென இன்னமும் புரியவில்லையா?? விவசாயி தான் தெய்வம் விளைச்சல் தான் வரம்
எப்படியோ போங்கள் இறக்குமதி இந்திய வியாதி விவசாய அலட்சியம் வியாதியே நிச்சயம்
சக்திராகவா
Title: Re: நெகிழியில் நெல் வருமா??
Post by: NiYa on June 10, 2017, 09:23:53 PM
nanba arumai
விவசாயி தான் தெய்வம் விளைச்சல் தான் வரம்
ithu inraya kalathil yarukum puriyavillai
Title: Re: நெகிழியில் நெல் வருமா??
Post by: சக்திராகவா on June 10, 2017, 10:04:29 PM
நன்றி தோழி! புரியும்! எரியும் நேரம் வரும்போது
Title: Re: நெகிழியில் நெல் வருமா??
Post by: ரித்திகா on June 11, 2017, 08:25:32 AM
''எப்படியோ போங்கள் இறக்குமதி இந்திய வியாதி விவசாய அலட்சியம் வியாதியே நிச்சயம்''
சொல்லி திருந்தவில்லையெனில் பட்டு திருந்தட்டும் ....
''விவசாயி தான் தெய்வம் விளைச்சல் தான் வரம்''
வரிகள் உண்மை ... மறக்கும் மறுக்கும் மனிதர்கள் நன்றி கேட்டவர்கள்.. கிடைத்தது வரம் என்று தெரிந்தும் மறுத்திடும் உலகம் ... வேண்டும் நேரம் வரம் கரம் விட்டு நழுவும் என்று அறிந்தும் அறியாதபோல் இருந்திடும் மூடர்கள் ...
'' புரியும்! எரியும் நேரம் வரும்போது''
இதுவே தாமதம் ... எரியும் நேரத்தில் புரியுமென்றால் சாம்பல்தான் மிஞ்சும் ....
அருமை அண்ணா .... இன்றைய நிலைமைதனைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர் ...
நன்றி ...
Title: Re: நெகிழியில் நெல் வருமா??
Post by: சக்திராகவா on June 11, 2017, 04:46:24 PM
மிக்க மகிழ்ச்சி இவ்வளவு நேரம் தந்து கருத்திட்டமைக்கு நன்றி!
பிகு: அண்ணா இல்லை தம்பி தான் 😜🙏
Title: Re: நெகிழியில் நெல் வருமா??
Post by: ரித்திகா on June 24, 2017, 08:08:01 AM