FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 21, 2012, 10:40:50 AM
-
திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது.
பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம். ( மனைவியோடு சண்டை போட்டு இதயநோய் வருதே என்ன செய்ய? என்று கேட்பவர்கள் விதிவிலக்கானவர்கள் )
கனடாவைச் சேர்ந்த 4403 இதய நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 33 சதவிகிதம் பேர் பெண்கள். இவர்களில் திருமணம் முடித்தவர்களை விட விவாகரத்தானவர்கள், மனைவியை இழந்தவர்கள், தனியாக வசிப்பவர்களுக்கு இதயவலி தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவரின் நலன் பாதுகாப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணவரின் உடல் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பதினாலேயே ஆண்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.
-
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.
நல்ல தகவல் ரெமோ விரைவில் அதற்குண்டான வேலையை பார்க்கலாம்! ;D
-
Enakoru gf venumada:D kalyanam pana