FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 06, 2017, 09:20:14 PM

Title: எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது
Post by: NiYa on June 06, 2017, 09:20:14 PM
எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது

எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது
கூட இருப்பவர்களிடம் என்னால் அதை சொல்லி
புரியவைக்க முடியவில்லை...
என் நிலை அறிந்து அவர்கள் ஒதுங்குவதாயுமில்லை...
தலை மறைவாக வாழ்வதற்கான அனுபவும் தைரியமும்
எனக்கு கிடையாது

முயற்சித்தாலும்
யாருடைய  அரவனைப்புக்குள்ளாக நேரிடும்.
சொல்லாமலே தூரவாக தொலைந்து போனாலும்
பரிதாபப்பட்டு என்னை தேடி பிடிக்க கூடும்.

நான் நானாக இருந்து நாளாகிவிட்டது.
இப்போது என்னை நானே மற்றவர்களிடத்தில்
இருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருக்கிறேன்.

உறக்கத்தின் போதிலும் எனக்கு விடிவு கிடைப்பதாயில்லை
அனுமதியின்றி கனவிலும் பலர் நடமாடுகிறார்கள்.
என்னை சொந்தம் கொண்டாடுபவர்களிடம்
என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என
எப்படித்தான் சொல்லுவது.

என்னிடம் உதவி பெற்றவர்களும் தொடர்பிலிருப்பதையே
நன்றி கடனாக கருதி என் நிம்மதியை குலைக்கிறார்கள்..
மரியாதை கொடுத்தவர்களை ஞாபகத்தில் வைக்கவோ
அவமானப்படுத்தியவர்களை பழி வாங்கவோ எனக்கு நேரமில்லை...
காட்டி கொடுத்தவர்கள் என் கண்முன்னே
காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்

துரோகிகளால் எனக்கு எற்பட்ட பயமும் போய் விட்டது.
எதிரிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும்
பலமில்லாதவர்களாய் இருப்பதால் நான் தப்பிவிட்டேன்.
போட்டி போடுவதற்குதான் ஆள் இல்லை ஆனால்
பொறாமை படுபவர்கள் கூட்டம் ஓயவில்லை...

சகிப்புக்குள்ளான வாழ்க்கையில் அடிமைப்பட்டு
ஆசையை அனுபவிக்க எனக்கு தேவை இல்லை..
என்னிடமிருந்து அன்பை அள்ளி எடுத்தவர்களும்
என் கண்கள் நனைய காரணமாகிவிட்டார்கள்.

மரணத்தினாலே ஒரு நிரந்தர தனிமையும் விடிவும் கிடைக்கும்
என முற்றும் நம்பியே... தற்கொலைக்கு தயாராகிறேன்.
கடவுளே திரும்பவும் என்னை ஒரு மனித பிறவிக்கு மாற்றி
துயர பாதையில் பயணிக்க விடாதே..




Title: Re: எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது
Post by: SunRisE on June 07, 2017, 01:19:53 AM
Thozhi Niya.

Ungala. Kavithai arumai

3nakku piditha varigal
உறக்கத்தின் போதிலும் எனக்கு விடிவு கிடைப்பதாயில்லை
அனுமதியின்றி கனவிலும் பலர் நடமாடுகிறார்கள்.
என்னை சொந்தம் கொண்டாடுபவர்களிடம்
என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என
எப்படித்தான் சொல்லுவது.

Vazhthukkal thozhi
Title: Re: எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது
Post by: NiYa on June 07, 2017, 06:22:55 AM
nanri  :)
Title: Re: எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது
Post by: AYaNa on June 07, 2017, 12:44:33 PM
 >:(மரணத்தினாலே ஒரு நிரந்தர தனிமையும் விடிவும் கிடைக்கும்
என முற்றும் நம்பியே... தற்கொலைக்கு தயாராகிறேன்.
கடவுளே திரும்பவும் என்னை ஒரு மனித பிறவிக்கு மாற்றி
துயர பாதையில் பயணிக்க விடாதே..


ithuthaan innum pain kodukura vaarthaigal :'(