FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 06, 2017, 09:08:29 PM
-
:'( மறந்து விடுகிறார்கள் :'(
தழும்புகள் காணாமல் போனாலும்
நாம் காயப்பட்டதை மறப்பதில்லை...
விதைத்தது தான் முளைக்கும் என்றால் !
நாம் கொடுப்பது அன்பு கிடைப்பது வேதனையே..
அழுகையாவது ஓய்ந்து விடும் என்றிருந்தால்...
நமக்கு அதுவே பழகி விடுகிறது.
நெருக்கமானவர்கள் விலகினால்
நாம் நாமாக கூட இருக்க முடிவதில்லை...
விலகி போனது தெரிந்தும் ஏனோ நாம்
அதையே விரும்பி கொண்டிருக்கிறோம்.
போலியான நேசத்தையே நாம் உண்மையாக
வெறுக்க முடியாமல் தவிக்கிறோம்.
அன்புக்கு உரியவர்கள் தான் நம் அடி மனசில்
துயரத்தை புதைத்து விடுகிறார்கள்.
மறக்க முடியாத நினைவுகளை தந்தவர்கள்
நம்மையே மறந்து விடுகிறார்கள்
-
Arumai. Thozhi