FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 05, 2017, 10:06:38 PM
-
ஏற்ற தாழ்வுகள்
என்றுமே என் பேனா
எதையும் எழுதி எழுதி
கிழித்ததில்லை
என்றுமே என் விழிகள்
எதற்காகவும் காத்திருந்து
கலங்கியதில்லை
இன்று தான் முதல் முதலாய்
இவையெல்லாம் எனக்குள்
என்றாலும்
அத்தனையும் தந்தது நீ என்று
நிச்சயமாய் தெரியும் எனக்கு
எப்போதும் எனக்கு
இசை பிடிக்கும் தான்
என்றாலும்
இப்போதெல்லாம் இதய துடிப்பில்
உன் பாடல்கள் இசைப்பது தான்
புதிதாய் தெரிகிறது
எப்போதாவது நினைக்கையில்
எங்கோ இருந்தோ
எதிர்பாராத போது
முன்வந்து நின்று
கண்ணா மூச்சி ஆடுகிறாய் நீ
இந்த இனிய குழப்பங்கள்
உனக்கும் இருக்குமா ?
முன்வந்து கேட்டுவிடத் துடிக்கையில்
வார்த்தைகளோடு போட்டியிட்டு
வெற்றி கொண்டு விடுகிறது
உனக்கும் எனக்குமான
ஏற்ற தாழ்வுகள்
-
arumai niya :)
-
THozhi niya,
arumai kettuvidungal
-
niya sis :D rmba confusion la irukinga pola ;D poy ketutu engalukum sollunga ;D azzhaga elthirukinga sis thodarnthu elutha vazhthukkal