FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on February 21, 2012, 03:03:44 AM
-
கவலைகளும் ஏமாற்றங்களும்
என்னை சூழ்ந்து கொண்டதால்
கண்ணீரோடு கலந்து கொண்டிருக்கிறேன்
என் கவிதை வரிகளில்
உனக்காக நான் எழுதும்
என் காதலின் மன்னிப்பு கடிதத்தை
முறிந்து விட்டது என்று
நம் காதலை முறித்துவிட்டு போய்விட்டாய்
முறிந்து விழுந்தவனாக
இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறேன்
இன்னும் உன் நினைவுகளால்
நம் காதலில் நான் செய்த பிழை என்னவென்று
இன்று வரை எனக்கு தெரியவில்லை
உனக்கு தெரிந்தால்
எனக்கு பதில் அனுப்பு
உன் வீட்டு தெருமுனைகளை
கடக்கும் போதெல்லாம்
என் கண்களை உன் வீட்டோரம்
விட்டு செல்கிறேன்
உன்னை கண்டுவிடாதோ
என்ற நம்பிக்கையில்
என்னால் உனக்கு என்ன நேர்ந்தது,,,,சொல்லிவிடு
களங்கமற்ற தூய்மையான காதல் தானே
நம் காதல்
என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லையே
கண் அசைவுகளாலும்
ஊமை புன்னகையோடுதானே
நம் காதலை பரிமாறிக்கொண்டோம்
உன்னிடம் பேசகூட தயக்க படுபவன்
இன்று உன்னிடம் தயக்கமின்றி
மண்டி இடுகிறேன்
என் காதலில் பிழை ஏதும் இருந்தால்
என்னை மன்னித்து விடு
இந்த உலகத்தில் என்னை
அதிகமாக நேசித்த ஜீவன் நீ,,,,
இன்று என்னை அதிகமாக வெறுக்க
என்ன காரணம்
இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்
என்று சொன்னவர்கள் மத்தியில்
என்னையும் என் வாழ்க்கை முறைகளையும்
மாற்றிய தேவதை நீ,,,,
மற்றவர்கள் மதிக்கும் படி மாற்றியதும் நீ,,,,
என் வாழ்க்கை முறையில் என்னை
வெற்றியாளனாய் மாற்றிய உன்னை எப்படி மறப்பேன்
சொல் தேவதையே
உன்னை மட்டுமே
நினைத்து வாழ பழகிவிட்டேன்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்வதுகூட
உனக்கு கடினமாக தோன்றினால்
என்னை மன்னித்து விடு,,,,
நான் இன்றும் உன்னை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பதால்,,,,
இப்படிக்கு,,,,,,,,,,,,,,உன்னவன்
Naan rasithathu
-
என்னால் உனக்கு என்ன நேர்ந்தது,,,,சொல்லிவிடு
களங்கமற்ற தூய்மையான காதல் தானே
நம் காதல்
என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லையே
கண் அசைவுகளாலும்
ஊமை புன்னகையோடுதானே
நம் காதலை பரிமாறிக்கொண்டோம்
நல்ல வரிகள் உண்மையான நேசம் என்ன என்பதை பிரதிபலிக்கும் வரிகள்!
பகிவிர்க்கு நன்றி ரெமோ!
-
Thanks Usf
-
இந்த உலகத்தில் என்னை
அதிகமாக நேசித்த ஜீவன் நீ,,,,
இன்று என்னை அதிகமாக வெறுக்க
என்ன காரணம்
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடைவெளி அதிகம் இல்லை போலும்
-
hmm oruthar athikama virumbina inoruthar athikama verukuranga
-
yarathu naa potta liste la ullavangalaa
-
ha ha nee pota list la missing :D atha than nan anaikey sonen