அடையாளங்கள் நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.
காரணம்
நீ
நிஜங்களிலிருந்து பிறந்த
மாயைகளுள் மூழ்கியும்
போலிகளுள் புதையுண்டும்
போயிருக்கிறாய்
உணர்வுகளை விடவும்
அதிகமாய்
உருவங்களை நேசிக்கிறாய்
வேஷங்களுள் இருந்து
வெளிப்படும் வரையில்
நாம் நாமாயிருப்பது என்பது
உனக்கு வேடிக்கையாயிருக்கலாம்
ஆனால் என்றோ ஒருநாள்
போலி உருத்தொலைந்து
வேஷங்கள் கலைந்து போக
நீ நீயாவே மட்டும்
மீதப்படுவாய்
அப்போதாவது
என்னை நானாக உணர்ந்துபார்