FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 30, 2017, 11:46:08 PM

Title: எப்படி முடிகிறது உன்னால்
Post by: NiYa on May 30, 2017, 11:46:08 PM
எப்படி முடிகிறது உன்னால்

யாருக்கும் சொல்லாமல்
ஊருக்குள் தூறல் போடும்
மழையைப் போலத்தான்
நீயும் எனக்குள்ளே
நிறைந்து போனாய்
எனக்கு கூடத் தெரியாமலே

தனிமையான  தருணங்களில்
கூடவே நடக்கும்
நிழல் கூட அந்நியமாய்ப் போனது
இப்போதெல்லாம்

யாரும்மில்லா நடை பாதை
மொழி புரியா இசை
ஒளியில்லா நிசப்தங்கள்
எல்லாமே நினைவுறுத்துகிறது
உன்னை மட்டும்

எப்போதும்
ரகுமானின்  பாடல்களை
இசை மீட்டும் என் மனது
அடிக்கடி
மௌனங்களையே
மொழிபெயர்க்கிறது இப்போது

எல்லா மாற்றங்களையும்
என்னுள் தந்துவிட்டு
எவ்வித சலனமுமின்றி இருக்க
எப்படி முடிகிறது உன்னால்
 
Title: Re: எப்படி முடிகிறது உன்னால்
Post by: SunRisE on May 31, 2017, 12:01:36 AM
Thozhi. Niya,
Mounam amaithi irandume purithalin ethiri ena mounam een Manama thiranthidu endru sonna vitham arumai
Title: Re: எப்படி முடிகிறது உன்னால்
Post by: ரித்திகா on May 31, 2017, 07:58:35 AM
(https://s10.postimg.org/ujbufvkvd/image.jpg)
Title: Re: எப்படி முடிகிறது உன்னால்
Post by: MyNa on May 31, 2017, 09:30:03 AM
எப்போதும்
ரகுமானின்  பாடல்களை
இசை மீட்டும் என் மனது
அடிக்கடி
மௌனங்களையே
மொழிபெயர்க்கிறது இப்போது

எல்லா மாற்றங்களையும்
என்னுள் தந்துவிட்டு
எவ்வித சலனமுமின்றி இருக்க
எப்படி முடிகிறது உன்னால்

Arumaiyaana varigal sis..
mownam vazhkaila neraya solli kodukum :)
Namake nammala pathi unara vaikum :)
Aazhamana varigal.. azhaga kavithai..
vazhthukal sis :D
Title: Re: எப்படி முடிகிறது உன்னால்
Post by: NiYa on May 31, 2017, 12:07:32 PM
nanri myna  :)
Title: Re: எப்படி முடிகிறது உன்னால்
Post by: SarithaN on May 31, 2017, 10:53:47 PM
வணக்கம் தங்கச்சி

வலிதரு நினைவுகள்
தொலைய வேண்டும்
வரும்கால வாழ்வதை
எண்ணி ஓடவேண்டும்

நம்பியோர் நம்பியபடி
நன்மையின் வழிசென்று
தாயைப்போல பிள்ளையெனும்
பெருமை அன்னைக்கு தந்திடுக

நன்றி நீயாமா