தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 29, 2017, 09:33:01 PM
Title: மனித உரிமை மீறல்
Post by: NiYa on May 29, 2017, 09:33:01 PM
மனித உரிமை மீறல்
வலி அறிய பிஞ்சு குழந்தைகளும் நோவறியாத மலர் சிட்டுகளும் வெயிலிலும் மழையிலும் பனியிலும் பரிதவித்து வாடியதை பரிவு கொண்ட மனதோரே நீங்கள் ஏற்பீர்களோ ?
வயோதிப காலத்தில் கூட நிம்மதியாக வீட்டில் உறங்காமல் நிம்மதியற்று காட்டிலும் மேட்டிலும் வெயிலிலும் உடல் பரிதவிப்பதை பரிவுகொண்ட மனதோரே நீங்கள் ஏற்பீர்களோ ?
கை இழந்து கால் இழந்து கணவனை இழந்து கைம்பெண்களும் கர்பிணிப்பெண்களும் கண்ணீர் சொரிவதை எட்டி நின்று பார்த்தவர்கள் மனித உரிமை மீறலை ஏற்பீர்களா ?
உள்ளம் வெதும்பி உடல் கருகி மனம் இழந்து உருக்குலைந்து போனதை உணர்ந்து மனித உரிமை மீறலை ஏற்பீர்களா சொல்லுங்கள்?
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: SunRisE on May 29, 2017, 10:56:22 PM