தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 29, 2017, 12:54:40 PM
Title: மழை !
Post by: ChuMMa on May 29, 2017, 12:54:40 PM
வானத்தில் உள்ள சொர்க்கத்தை பூமியிலுள்ளவர்கள் காண இறைவன் அனுப்பி வைத்த வரமே மழைத்துளிகள்
சின்ன குழந்தையாய் இருந்த போ து பாட்டியின் மடியில் உட்கார்ந்து முற்றத்தில் கொட்டும் மழைத்துளியை ரசித்தேன்
சிறிது வளர்ந்ததும் அதில் நனைய ஆவல் கொண்டு நண்பர்களுடன் ஆடி பாடி நனைத்தேன் அம்மாவிடம் திட்டும் வாங்கினேன்
மழை வந்ததால் பள்ளிக்கு விடுமுறையாம் கூட்டி செல்ல அப்பா வந்தார் பள்ளிக்கு அப்பாவின் குடையில் அவருடன் ஒரு பயணம் வீட்டிற்கு வரும் வழியில் சூடான தேநீர் பருகினோம்
வீட்டில் அம்மா எங்களுக்காய் சூடாக வடை செய்து காத்திருந்தாள் ..ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகையில் வானத்தில் இடி இடித்தது ..தலையில் தான் விழுமோ என்று பயத்தில்கட்டி பிடித்து கொண்டோம் அம்மாவும் நானும்
பாட்டி ஏனோ அர்ஜுனனை துணைக்கு அழைத்த படி கண்மூடி இறைவன் நாமத்தில் இருந்தார்
அப்பா சிரித்தபடி எங்களை கவனித்து பார்த்து கொண்டு இருந்தார் ..
குளிர்ந்த காற்று கொட்டும் மழை ஜன்னலோரத்தில் சாரல் அடிக்கும் மழை துளி கையில் சூடான தேநீர் உடன் குடும்பம்,
சுவர்க்கம் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
Title: Re: மழை !
Post by: SunRisE on May 29, 2017, 01:29:37 PM