தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 28, 2017, 12:43:20 AM
Title: செல்லவிடு
Post by: NiYa on May 28, 2017, 12:43:20 AM
விழிகளிரண்டும் உரசிக்கொண்ட பொழுதுகளில் வெளிவந்த வார்த்தைகள் - இப்படி என்னை மௌனங்களில் புதைத்து விடுமென எண்ணவில்லை என்றுமே
தொலைதூரம் இனணந்து வந்து சிறு நொடியில் பிளவுபடும் எம் நகர வீதிகள் போல நகர்கிறது எம் வாழ்வும்
அழகான வார்த்தைகள் யாரும் அறிய பார்வைகள் விரல் தீண்டும் ஸ்பரிசங்கள் விழிமூடும் கனவுகள் எதுவும் இருந்ததில்லை எங்கும் உனக்கும் இடையில்
ஆனாலும் நிஜமாவே கனவுகளில் பயணித்த என்னை நிஜங்களின் நடுவே இழுத்து வந்தது நீ தான்
பிரியாவிடை நாளில் போடும் ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் - போல கனக்கிறது மனம்
காரணம் தெரிந்தால் சொல்லிவிடு இல்லையேல் காலத்தை கனவுகளின் பாதையில் செல்லவிடு
Title: Re: செல்லவிடு
Post by: VipurThi on May 28, 2017, 10:15:28 AM
Hi niya sis ;D rmba azhagana kavithaigal :D but ellame pirivula iruku :( unga 3 kavithailayum oru continuous theriyuthu :) reality life a apdiye patha mathiri iruku :) read panum bothu mind la aazhamana oru thaakam varuthu :) keep writing :)
Title: Re: செல்லவிடு
Post by: SunRisE on May 29, 2017, 01:17:25 PM
Niya தோழி, உங்களின் கவிதை நடை மிகவும் அருமை
கனவுலகில் வாழ்ந்த என்னை நிஜ உலகில் அழைத்து வந்தது நீ
அருமை தோழி. வாழ்த்துக்கள்.
Title: Re: செல்லவிடு
Post by: ரித்திகா on May 31, 2017, 01:21:11 PM
(https://s11.postimg.org/8e8nbhi3n/nittt.jpg)
Title: Re: செல்லவிடு
Post by: SarithaN on May 31, 2017, 10:57:06 PM
வணக்கம் தங்கச்சி
கவிதை மனித வாழ்வின் பருவ மாற்றத்தின் அவலம் பலருக்கும் ஒரே அநீதி தியதி
எப்போது நிலைக்குமோ உண்மை அன்பு உலகில்
எங்கும் எதிலும் பிரிவும் பிளவும் யார்செய் பாவமோ ஏன் இந்த சாபமோ மானிடனே