தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 28, 2017, 12:18:19 AM
Title: திரும்பி வரமாட்டாய்
Post by: NiYa on May 28, 2017, 12:18:19 AM
நீ என்னை விட்டு நிரந்தரமாக போகலாம். எல்லா வாசலின் கதவுகளையும் - நான் உனக்காகவே திறந்துவிட்டிருக்கிறேன்.
என்னிடம் இருந்து உனக்கு என்ன தேவைப்படுகிறதோ... அவைகளையும் எடுத்துக்கொண்டு போ.. ஆனால் என் நினைவுகளை மட்டும் விட்டுப்போ....
ஒரு போதும் என்னிடம் திரும்பி வர நினைக்காதே... நான் திருந்தி வாழ நினைக்கிறேன். உனக்கும் எனக்கும் இடையிலான தவிப்பையோ... அந்தரங்கங்களையோ அதன் ஆதாரங்களையோ யாரிடமும் காண்பித்து அனுதாபம் வாங்காதே...
அது உன்னையே உருக்குலைய செய்யும். எனக்கு தற்சமயம் ஒரு வருத்தமுமில்லை உன்னோடு வாக்குவாதப்பட விருப்பமுமில்லை உன் சுகந்திரத்தை அடைவதற்கு ஒரு போதும் பயப்படாதே... நான் அதற்கு தடையுமில்லை...
நாட்கள் கடந்த பின்னர் என் ஞாபகம் உனக்கு வராமலிருப்பதற்காக - இப்பவே வேறோர் விடையத்தில் அக்கறைப்படு.
மற்றவர்களை கவருவதற்கு உன்னிடம் நிறைய இருக்கிறது - அதற்காக உன்னை விலை கொடுத்து வாங்க அனுமதிக்காதே...
நான் உன்னை நம்பியதுபோல் - நீ யாரையும் நம்பி ஏமாறாதே .. விரும்பியவர்களிடம் நடிக்காமல் முகத்துக்கு முன் சந்தேகப்படு.
என்னோடு இருந்த நாட்களில் நீ என்மீது செலுத்திய அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் நீ நியாயமாகத்தான் யோசிப்பாய் - என்னோடான உறவை நிறுத்தியதிலே அதை உறுதிப்படுத்திவிட்டாய்.
உன்னை பற்றி ஒன்று மட்டும் எனக்கு நன்றாகவே தெரியும் "துக்கங்களில் இருந்து நீ இலகுவில் வெளிவருவாய்" - ஆதலால் என் மரணத்துக்காகவேனும் உன்னிடம் இருந்து... ஒரு துளி கண்ணிரேனும் செலவாகாது.
என்னிடம் திரும்பி வரமாட்டாய் என்பதை முழுமையாக நம்பித்தான் உன்னை அனுப்புகிறேன்
Title: Re: திரும்பி வரமாட்டாய்
Post by: MyNa on May 28, 2017, 07:28:55 PM
Title: Re: திரும்பி வரமாட்டாய்
Post by: ChuMMa on June 06, 2017, 05:51:56 PM
சகோ படிக்கையில் மனம் கனக்கிறது
பிரிவு என்றும் லகுவாய் கடப்பதில்லை ரணம் அதை தராமல்
காலம் மறைக்கலாம் ரணத்தை ஆனால் அழிக்க முடியாது
நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் நலம் வேண்டும் யாராயினும் அவர் கடவுளுக்கு ஒப்பானவர் ..சகோ இன்று நீங்களும்
வாழ்த்துக்கள்
Title: Re: திரும்பி வரமாட்டாய்
Post by: AYaNa on June 06, 2017, 06:38:53 PM
:'( :'ஒரு போதும் என்னிடம் திரும்பி வர நினைக்காதே... நான் திருந்தி வாழ நினைக்கிறேன். உனக்கும் எனக்கும் இடையிலான தவிப்பையோ... அந்தரங்கங்களையோ அதன் ஆதாரங்களையோ யாரிடமும் காண்பித்து அனுதாபம் வாங்காதே... >:(