தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 27, 2017, 04:14:55 PM
Title: தவிக்கிறது என் மனசு
Post by: NiYa on May 27, 2017, 04:14:55 PM
நிரந்தர பிரிவாக இருந்திருந்தால் நம்மில் ஒருவருக்காவது நின்மதி கிடைக்க வாய்ப்பிருந்திருக்கிறது.
தற்காலிக விலகலால் யார் பக்கம் நியாயம் இருக்கிறது - என்கிற கேள்வியை மட்டுமே தேட வேண்டியிருக்கிறது.
என்னை வேண்டாம் என்று எப்பவோ நீ தூக்கி எறிந்திருந்தால்.- நான் ஒரே தடவையிலே உடைந்திருப்பேன்.
கூட இருந்து நீ கொடுக்கும் நெருக்கு வாரங்களால் - தற் சமயம் நான் நொருங்கி கிடக்கிறேன்.
தூரமாக இருந்த போதிருந்த தவிப்பு - நெருக்கமாகி விட மொத்தமாகவே காணாமல் போய் விட்டது.
நெருக்கமான பிறகு இருந்த ஈர்ப்பு - ஏனோ கொஞ்ச நாளிலே தானாகவே தூரமாகி விட்டது.
மௌனத்தின் அர்த்தத்தையே புரிந்து கொண்ட என்னால் - வார்த்தைகளின் கனத்தை இப்போது தாங்க முடியவில்லை...
கோபத்தின் உச்சத்துக்கு போனாலும் ஊமையாய் - அமைதி காக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறேன்.
காயத்தின் வலியை ஓரளவு தாங்கிக் கொள்ளலாம் - ஆனால் வலியே ஆறாத காயமாகி விட்டது.
நிரம்பி விட்ட உண்டியல் போல வேதனைகளை - இனியும் சுமக்க முடியாமல் தவிக்கிறது என் மனசு
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: SwarNa on May 27, 2017, 05:11:22 PM
niya tavippu solradhum tavippave iruku .thodakame arumai .thodarndhu unga kavithaigalai edirparkiren.nandri :)
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: ChuMMa on May 27, 2017, 07:21:01 PM
அருமையான வரிகள் கொண்ட கவிதை வலிகள் நிறைந்த எழுத்து
சிலநேரம் தூரத்தில் இருக்கும் போது நெருக்கமாக இருக்கும் மனம் அருகில் வந்தால் எனோ தூரமாகி விடுகிறது
வாழ்த்துக்கள் சகோ
உங்கள் கவிதையின் மேல் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: SunRisE on May 27, 2017, 07:42:55 PM
அன்பு தோழி Niya,
முதல் கவிதை தவிப்பின் தாக்கத்தை எளிய நடையில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
கோபத்தின் உச்சத்துக்கு போனாலும் ஊமையாய் - அமைதி காக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறேன்.
காயத்தின் வலியை ஓரளவு தாங்கிக் கொள்ளலாம் - ஆனால் வலியே ஆறாத காயமாகி விட்டது.
நிரம்பி விட்ட உண்டியல் போல வேதனைகளை - இனியும் சுமக்க முடியாமல் தவிக்கிறது என் மனசு
உச்ச வரிகள் உணர்வுபூர்வமான வார்த்தைகள் வாழ்த்துக்கள்
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: gab on May 27, 2017, 09:05:48 PM
முதல் கவிதையே அருமை. தொடரட்டும் உங்கள் கவி பயணம்.
வாழ்க்கை என்பது ரோஜாக்களின் மெத்தை அல்ல. சோதனைகளையும் , வலிகளையும் எதிர் கொண்டு ஜெயிப்பதே வாழ்க்கை.பெரும்பாலானவர்கள் சந்திக்கும் சவாலே பிடித்தவர்களின் தற்காலிக பிரிவு .இடைவெளிகளை குறைக்க இருவரும் முயற்சித்தால் மட்டுமே சாத்தியம்.
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: MyNa on May 28, 2017, 07:13:27 PM
Vanakam niya.. kavithai romba urukama iruku :) Haha neraya solanum pola iruku.. aana varthaigal illai..manasula etho oru vali.. unga kavithai padichathula irunthu. vazthukal.. thodarnthu kandipa ezhuthunga :) muthal kavithaiyile unga ezhuthuku fan aagiten ;)
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: SarithaN on May 31, 2017, 10:50:44 PM
வணக்கம் தங்கச்சி
கவிதை படித்தேன் கனத்து போனது மனம் வலிகளில் ஊறும் கவிகள் அழியாமை கொள்ளும்
ஒருவர் கிறுக்க மற்றவர் கத்துவது மொழி நீ கிறுக்கி வலிபோக்க படித்து வலித்ததென் மனம்
நிரம்பிய உண்டியல் உடைக்க படுவதுபோல் வாழ்க்கை படும் கொடுமை யாருக்கும் வேண்டாம்
கவிதைக்கு வாழ்த்துக்கள் கவிதையின் துயரை கடவுளே போக்கக்கடவர் நன்றி நீயாமா
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: ராம் on June 01, 2017, 07:02:08 AM
hi niya superb kavithai starting amarkkalam... ungal kavipayanam thodara vaazhthukkal
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: ரித்திகா on June 01, 2017, 08:32:33 AM
(https://s14.postimg.org/qfp7n6h29/niyaaaa.jpg)
Title: Re: தவிக்கிறது என் மனசு
Post by: NiYa on June 02, 2017, 10:49:05 PM