(https://i.ytimg.com/vi/fCfMkNixBXM/maxresdefault.jpg)
ஹாய் ஹாய் R .J .Ram .
நல்ல அழகான உச்சரிப்புல அருமையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கறீங்க .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் ராம் .என்னவோ இந்த வாரம் எனக்கு பாடல் கேட்க தோணுச்சு அதனால நான் இந்த வாரம்
தீபாவளி திரைப்படத்தில இருந்து பாடல் கேட்க இருக்கிறேன் .
தீபாவளி 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை துள்ளாத மனமும் துள்ளும் புகழ் எழில் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தனர். ஜெயம் ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சி ஹனீஃபா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த திரை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை மழையில்
Kadhal Vaithu ( காதல் வைத்து )
Pogadhey Pogadhey ( போகாதே போகாதே )
Kannan Varum Velai ( கண்ணன் வரும் )
Thoduven ( தொடுவேன் தொடுவேன் )
ஆகிய பாடல் மிக அருமை
இந்த திரைப்படத்துல நான் கேட்க விரும்பும் பாடல்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் என்ற பாடல்
இந்த பாடலில்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
என்னை மிகவும் கவர்ந்த வரிகள் .
அதனால இந்த பாடலை நம்ம இணைய தல நண்பர்களுக்கா கேட்கறேன்