தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 24, 2017, 01:27:29 PM
Title: மரணம் பேசியது
Post by: SarithaN on May 24, 2017, 01:27:29 PM
மரணம் பேசியது
மரணம் வருகிறேன் என்றது வா என்றேன் எப்போது என்றது உன் விருப்பம் போல் என்றேன் அதுதான் வழக்கம் சலுகை உனக்கு சொல் என்றது
நூறு வயதில் வா என்றேன் அழுதது மரணம் ஏன் என்றேன் நீ பாவம் என்றது புரியவில்லை என்றேன் தாங்கிட மாட்டாய் என்றது ஏனென கேட்டேன் அன்பில்லா உலகம் என்றது
எப்படி தெரியும் என்றேன் நானும் அனுபவித்தேன் என்றது எப்படி என்றேன் பாவம் என்று நான் நேசித்தால் யாரிடமும் நன்றி இல்லை கேவலமாய் கொடிய வார்த்தைகள் கொண்டு இகழ்கிறார்கள் என்றது
நான் வெறுத்து விட்டால் தாங்க மாட்டார்கள் நடை தளர்ந்து உடல் நலிந்து தானே இயங்க சக்தி இன்றி கேட்பார் காண்பார் யாருமின்றி மெய் அழுகி பொய்யாகி அன்பு செய்ய யாருமின்றி தவிக்கையிலே எனை அழைப்பார் நான் என்ன வேலை இல்லா வெட்டியோ
இரக்கம் கொண்டே கடவுள் கட்டளையிட வருகிறேன் உண்மையை உணர்ந்து எனை ஏற்றால் மகிழ்ச்சி இல்லையேல் அழுந்துவதும் வசை கேட்பதும் உனக்கான நியதி
இப்போது சொல் எப்போது வர என்றது உன் விருப்பம் போல் வேண்டாம் கடவுள் இரங்கும்போது வா என்றேன்
சிரித்து விட்டு சொன்னது சீக்கிரம் வரேன் கடவுள் சொன்னார் உன்னிடம் சொல்ல மனிதனாய் வாழட்டுமாம் மரணத்தின் பின் தன்னிடம் வர
நன்றி என்றேன் வேண்டாம் என்றது ஏன் என்றேன் நன்றி அபுக்கு தூரம் என்றது வலிக்கையில் வெறுக்காது வா என்றேன் வருந்த விடேனென விடைபெற்றது