FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on May 23, 2017, 11:10:10 AM
-
உன் வாழ்க்கை நீ வாழத்தான்
வாழ்ந்து தான் பார்
ஏளனம் இகழ்ச்சி
இன்பம் துன்பம்
இவையாவும்
பல நேரங்களில்
வெவ்வேறு பரிமாணங்களில்
இவை அனைத்தும்
உன் விதி என்கிறது
படைத்தவனின் பதிவுகள்
கனவாகி போனது
என் வாழ்வு என நான்
கலங்கி நின்ற
நேரங்களில்
சுமைகள் சுகமானது
எமது தோள்களில்
இறக்கி வை
நங்கள் இருக்கிறோம்
என்கிறது தோழமை
உனக்கென்ன
வாழ்க்கை தந்தேன்
என் உதிரம் குடுத்து
உயிர் தந்தேன்
என் கடமை செய்தேன்
நீ துக்கம் கொள்ள
இல்லை என் மகனே
என்கிறது தாய்மை
பணம் தந்தேன்
வழக்கை பற்று தந்தேன்
நல் கல்வி தந்தேன்
உனக்கு என்
முகவரி தந்தேன்
என் மகனே
என்கிறது தகப்பன்
நீ வேண்டும்
உன் நிழல் வேண்டும்
என் வாழ் நாள் முழுதும்
நித்தம் நித்தம்
அன்புடன் ஆசையுடன்
நீ என்னை ஆளவேண்டும்
என்கிறது காதல்
அத்தனை வார்த்தைகளும்
பல நேரங்களில்
நிறம் குணம்
மாறிப் போவது ஏன்?
சூழல்கள் சூழ்ச்சிகள்
நிறைந்த உலகத்தில்
மனிதனின் நிறம்
மாறுவது
இயற்கையா அல்லது
அதுவும் விதியா?
சில நேரங்களில்
சில மனிதர்கள்
-
வணக்கம் பிரியன் சகோதரா
அனைவருமே நம்முடன்
அனைவருமே நமக்காக
அனைத்துமே கிடைக்கும்
அனைவரிடமும் கிடைக்கும்
ஆயினும் ஓர் நாள்
எல்லாமே பொய்த்து
போலியாகி நிற்கையில்
தனித்த மனம் கலங்கி
விம்மி வெதும்புகையில்
அனாதைக் கோலம் தருவித்து
சில நேரங்களில்
சில மனிதர்கள்
கொலையாளிகளாகி
விதியென சொல்கின்றனர் வேதனை
அழகிய ஏமாற்றம் கவிதை
வாழ்த்துக்கள் சகோதரா நன்றி
-
Vanakam piriyan :)
Amma appa natpu kadhal nu elame irunthalum ethuvume nirantharam ilai enbathu than unmai..
Neenga sonathu pola
உன் வாழ்க்கை நீ வாழத்தான்
வாழ்ந்து தான் பார்..
haha enna aanalum thuvandu pogama thavaraana mudivukum pogama vazhnthu than paakalam nu iruku unga kavithaiya padichathum :D
-
சகோதரா உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கு
நன்றி
சகோதரி மைனா அவர்களுக்கு நன்றி. உண்மைதான் சகோதரி
வாழ்வின் விளிம்பில் நிற்பவனிடம் வாழ வழித்துணை அவன் வாழ். நாளில் அவன் கற்ற பாடமே
-
superb :)
-
Thanks. Ayana
-
:)
-
arumaiyana varikal nanba
-
Nanri. Thozhi Rithika and. Niya
-
un vaazkai nee vazathan
vaazndhudan paar
vaazndhu parka pokiren :)
-
Nanri. Swarna thozhi