FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 19, 2012, 08:05:52 PM

Title: என் நினைவுகள் மட்டும்
Post by: ஸ்ருதி on February 19, 2012, 08:05:52 PM

எங்கோ ஒரு மூலையில் நானும்
எங்கோ ஒரு மூலையில் நீயும்
பார்க்காமல் பழகினோம்
பார்த்து மகிழ்ந்தோம்
நாள் முழுதும் பேசி சிரித்து
நாள் முடிவில்
பிரியும் தருணத்தை கூட
பிரிய மனம் இல்லாமல்
பிரிவேன்...

தாயின் பாசத்தை உணர்ந்தேன்
உன் பாசத்தில்...
தந்தையின் கண்டிப்பை உணர்ந்தேன்
உன் நேசத்தில்

உன்னால் மட்டும் ஏன்
என்னை உணரமுடியவில்லை
என் பாசத்தில் வேஷத்தை கண்டாயோ??

ராசி இல்லாதவள் நான்
பல உறவை இழந்து
தவித்த போது ஆறுதல் தந்தாய்
உன்னை இழந்து தவிப்பேன்
என்று கனவிலும் கருதவில்லை

ஆறுதல் தேடும் மனது
போகும் இடம்
எல்லாம் உன் நினைவு

விரைவில்
எல்லாவற்றையும் விட்டு
செல்ல நினைக்கிறன்
என் நினைவுகள் மட்டும்
உன்னை தொடும் என்ற நம்பிக்கையில்...
Title: Re: ராசி இல்லாதவள் நான்
Post by: Yousuf on February 19, 2012, 08:10:58 PM
நம்பிக்கையில் அம்ற்றும் முயற்சியில் வாழ்க்கை நகரும் போது ராசி எங்கிருந்து வந்தது சகோதரி. உங்கள் நம்பிக்கையை மற்றும் முயற்சியை விட்டு விடாதீர்கள் உங்கள் தோழி மீண்டும் உங்களோடு இணையும் நாள் வெகு விரைவில் வரும்.