FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AYaNa on May 17, 2017, 09:25:19 PM

Title: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: AYaNa on May 17, 2017, 09:25:19 PM
உண்மையான அன்பு உயிரைக் கொடுக்குமென்று கூறும் நாம் உணரவில்லை, உண்மையான அன்பு தனக்காக பிறர் தற்கொலை செய்து கொள்வதை விரும்பாதென்று...

உண்மையில் அன்புடை மனதில் பலவீனம் என்று நுழைவதில்லை...
பலவீனம் நுழையாத மனம் அசையாதிருக்கிறது,
புயலால் துளைக்க முடியாத பாறையாய்...
அவ்வாறிருக்கும் மனம் தற்கொலையை என்றும் நாடுவதில்லை...

அன்புடை மனம் சிறப்பை அடைய முயற்சிப்பதில்லை...
ஆனால், அந்த அன்புடை மனம் ஆற்றும் அத்தனை செயல்களும் சிறப்பானவை தான்...

அளவற்ற அன்பே மனக் காயங்களுக்கு மருந்தாகி மன அமைதியைத் தந்து, பலவீனமில்லா வாழ்வைத் தருகிறது...

தற்கொலை எதற்காக செய்து கொள்ள வேண்டும்?

காதல் தோல்வியா?

கவலை வேண்டாம்...
காதல் தோல்வியே உன்னை நீ அறிவதற்கான முதல் வாய்ப்பினை உனக்குக் கொடுக்கிறது...

வேறென்ன காரணம்?

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவிட்டாயா? அல்லது தேர்ச்சியடையவில்லையா?

கவலை வேண்டாம்..
மதிப்பெண்களால் தீர்மானிக்கப்படுவதில்லை உனது திறமைகள்..

எதற்காகவும் தற்கொலை செய்தல் வேண்டாம்...

உண்மையை உணர்..
அன்பே வாசனை நிறைந்த வாடாத மலர்..

இறப்பைத் தீர்மானிக்கும் அதிகாரமற்றவன் நீ..
அன்பால் எதையும் சாதிக்கும் அன்புடையவன் நீ...

-படித்ததில் பிடித்தது
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: SunRisE on May 18, 2017, 11:37:50 AM
arumaiyyana aaruthal arumayana ubathesam
urchagam tharum varigal

nanri
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: SarithaN on May 18, 2017, 09:56:49 PM
வணக்கம் AYaNa

படித்ததில் பிடித்ததென
சமூக விழிப்புணர்வை
கருவாக சுமந்து நிற்கும்
ஆக்கமதை நாங்களும்
படித்திட கொடுத்தமைக்கு
மிக்க நன்றி

உங்கள் சுய படைப்புக்களும்
இங்கே பதிவாக   
வாழ்த்துகின்றேன்
வாழ்க வளமுடன்
நன்றி
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: MyNa on May 19, 2017, 08:56:31 AM
Vanakam ayana.. wc to forum ;)
Nalla arumaiyaana varigal..
Nandri ipadi oru pathiva koduthatharku :)
thodarnthu neraya pathiva kodunga..
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: AYaNa on June 08, 2017, 01:19:13 PM
tq sunrise machan
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: AYaNa on June 08, 2017, 01:22:32 PM
உங்கள் சுய படைப்புக்களும்
இங்கே பதிவாக   
வாழ்த்துகின்றேன்
வாழ்க வளமுடன்
நன்றி
 :) ;)

apdiye agattum mr sarithan  ;) ;)
Title: Re: தற்கொலை என்பது அன்பில்லாமையின் வெளிப்பாடு
Post by: AYaNa on June 08, 2017, 01:23:32 PM
tq myna sis