FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 17, 2017, 01:19:27 PM

Title: வேடிக்கை மனிதன் !
Post by: ChuMMa on May 17, 2017, 01:19:27 PM
வேடிக்கை நிறைந்தது நம் வாழ்க்கை
தோழா ,

இரவை பகலாக்க நினைத்து உழைத்து
பகலை இரவாக்கி உறங்கினான்

முகபுத்தகத்தில் ஆயிரம் நண்பர்களாம்
பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவரின்
முகமறியாதவன்

பெண்ணை தாழ்வாக பேசியவர் கூட
இன்று பெண்ணின் முகமூடியுடன் அலைகிறான்
இணையத்தில்


பத்தினியின் பெயர் சொல் என்றேன்
சிறிது யோசித்து சொன்னான் கண்ணகி என்று
அவன் வீட்டு பத்தினியின் பெயர் தெரியவில்லை போலும்

பெண் நாணத்தால் தலை நிமிராமல் நடந்த காலம் போய்
இன்று ஆணும் தலை நிமிராமல் நடக்கிறான் உடன் -தன்
தொலைபேசியை தடவி கொண்டு

ஆடை கிழிந்து ஒருவன் நடந்து வந்தால் அவனை
அருவருப்பாய் பார்க்கிறான் -அவனே
உயர் ரக வாகனத்தில் வந்து இறங்கினால்
அதிசயமாய் பார்க்கிறான்

ஊர் உறவை மறந்து , புது உறவை வளர்த்து
பெற்றோரின் மனம் குளிர ஓரிரு வார்த்தைகள்
பேசாமல் -முகமறியா உறவோடு பல மணி நேரம்
தூங்காமல் விழித்திருந்து பேசும் உன் வாழ்க்கை
வேடிக்கை நிறைந்தது தான் தோழா ...


நன்றி
சும்மா

Title: Re: வேடிக்கை மனிதன் !
Post by: SunRisE on May 18, 2017, 11:58:42 AM
sagotharar Chumma,

Elimayana varigalil
Azhagiya velippadana kavithai

ஊர் உறவை மறந்து , புது உறவை வளர்த்து
பெற்றோரின் மனம் குளிர ஓரிரு வார்த்தைகள்
பேசாமல் -முகமறியா உறவோடு பல மணி நேரம்
 தூங்காமல் விழித்திருந்து பேசும் உன் வாழ்க்கை
வேடிக்கை நிறைந்தது தான் தோழா

unmayana varigal
Nanri sagotharane
Title: Re: வேடிக்கை மனிதன் !
Post by: SarithaN on May 19, 2017, 08:01:34 PM
வணக்கம் சும்மா சகோதரா

உங்கள் வேடிக்கை மனிதனை
மனதுருத்த கண்டுகொண்டேன்

மறுத்திட முடியா உண்மைகள்
என்பதிலும்
மறுத்திட முடியா சத்தியங்கள்
எனலாம்
சுமந்து நிற்கும் உணர்த்துதலை 

நிராகரிக்க ஏதுமில்லை 
வாழ்வியலை சீர் செய்ய
என் இதயத்திலும்
வலித்த சாட்டை
உங்கள் கவிதை  

வாழ்த்துக்கள் சகோ
நன்றி
Title: Re: வேடிக்கை மனிதன் !
Post by: MyNa on May 23, 2017, 05:53:44 PM
Vanakam chumma :)
Arumaiyaana karuthugalai konda kaviithai..
unmaiyin velipaada iruku varigal..

Aan, pen, samuga valaithalam, kudumbam, uruavugal, tholaipesi nu elatha pathiyum surukamagavum thelivagavum vivarichirukinga..

vazhthukal.. rasichu padichen..

Title: Re: வேடிக்கை மனிதன் !
Post by: ChuMMa on May 24, 2017, 12:19:12 PM
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றிகள் பல சகோ