FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on February 19, 2012, 01:25:59 AM

Title: மலரும் நினைவுகள்
Post by: supernatural on February 19, 2012, 01:25:59 AM
சிறகு முளைக்கா  குஞ்சுகள் ....
தாயின் சிறகில் தஞ்சம் கொண்டு வளர்வது போல் ...
தாய் தந்தை அரவணைப்பில் வளமாக வளர்ந்தேன் ...
அன்னை ,தந்தை ,தங்கை,தம்பி என வளர்ந்தேன் ...
எனக்கான சொந்தம் என இருந்தேன் ...

சுகமாக வாழ்ந்தேன்  ....
தேவைகள் இல்லை எனக்கு ..
வேதனை ஏதும் அறியவும் இல்லை எனக்கு ...
கரும்பாய் இனித்தது ....

இன்று ...
கவலைகள் வந்து சூழ்ந்தது ...
கடமைகள் கழுத்தை நெரித்தது  .

நீண்ட பெருமூச்சில் அந்த நினைவுகள் ....
மனக்கூட்டில் அந்த உறவுகள் ...
தனிமையில் இருக்கும் மனசு ...
திரும்ப கேட்கும் ...
அந்த அழகிய நாட்களை ...!!!.
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: gab on February 19, 2012, 01:41:09 AM
தாயின் அரவணைப்பில் இருக்கும் வரை வரும் துன்பங்களை  எல்லாம் அவளே தாங்கி நம்மை துன்பத்தின் நிழல் கூட அண்டவிடாமல் செய்கிறாள்.  இனிய கவிதை.கவிதை புனைவதில் நீங்கள் கைதேர்ந்தவர் என்று தெரிகிறது. தொடரட்டும் உங்கள் கவி பயணம்.
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: supernatural on February 19, 2012, 02:01:19 AM
nandri!!!!
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: ஸ்ருதி on February 19, 2012, 04:25:26 AM
அழகான கவிதை
குடும்பத்தை விடு ஏதோ ஒரு சூழலில் பிரிந்து இருப்பவரின் மன நிலையை அழகா சொல்லி இருக்கீங்க
வாழ்த்துக்கள் தலைப்பிலே தெரிகிறது உங்களது ஏக்கம் ;)
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: RemO on February 19, 2012, 08:32:45 AM
Quote
தனிமையில் இருக்கும் மனசு ...
திரும்ப கேட்கும் ...
அந்த அழகிய நாட்களை ...!!!.

unmai than veetai vitu thaniya irukum ovvoruvarukum ithey ennam than
arumaiyaana kavithai
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: Yousuf on February 19, 2012, 10:48:33 AM
அந்த அழகிய நாட்களை ஒவ்வொரு உள்ளமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறது.

கிடைக்குமா? அந்த அழகிய நாட்கள் கேள்விக்குறியாகவே முடிகிறது!

நல்ல கவிதை Supernatural! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
Title: Re: மலரும் நினைவுகள்
Post by: Global Angel on February 23, 2012, 02:58:33 AM
அன்னையின் அரவனைப்புதான் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளுக்கு இணையானது .... தாய்க்கு எங்கும் ஒரு தாய்மையின் கவிதை  நன்று