FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 18, 2012, 09:06:06 PM
-
அன்று நண்பர்கள் தமிழ் அரட்டைக்குள்
அறிமுகமாகி ஆடிஎடுத்துவைத்தவுடன்
அழகாய் ஆதிமுதல் ஜோதியாய்
அஜ்ஜோதியையே ஆரத்தியாய் எடுத்தென்னை
அரவணைத்து வரவேற்ற அன்பானவள் ...
அற்றட்டை அறையில் மட்டுமின்றி ஆசை நான்
அரும் கவிதை பகுதியில், ஆசையாசையாய்
அழகழகாய் கவிதை புனைவதற்கு ஆசை பட்ட முன்னரே
அவள் பெயரை பதித்து அரைகுறை வர்ணனையில்
அழகாய் ஒரு கவிதை பதித்தேன் அன்றே ..
அரைகுறையாய் என்றாலும் அழகாய்தான் இருந்தது
அவள் பெயரை பதித்ததாலோ என்னவோ ?
அத்தகும் அருமை பெருமைக்குரிய பண்பானவள்
அறிமுகமாகா புதுமுகம் எனும் அச்சம்
அடி மனதின் அடியிலும் பதியாதபடி
அவ்வச்சத்தை அகற்றி மறைமுகம் ஆக்கிய
அழகு பிறைமுகம் பொருந்திய தரை நிலவவள்
அன்பானவள் ,பண்பானவள் ,அழகானவள்
அருமைக்கும் ,பெருமைக்கும் உரியவள்
இத்துனை சிறப்பிற்குரிய சிறந்தவள்
யாரவள்? யாரவள் ? யாரவள் ?
18 -02 அன்று - தன் தாய்க்கு
முத்தான மணிமுத்தாய் - தன் தந்தைக்கு
உயர் சொத்தான பெரும் சொத்தாய்
பிறந்தவள்(அணு) தான் அவள் ...
முத்தான முத்தின் பிறந்தநாளுக்கு
ஆண் பெண் என பாகுபாடின்றி
பல வகை பூக்கள் த்தம் பங்கிற்கு
பாராட்டே பாராட்டும் படி பாராட்டும்
பொன்னான பனி மலர்கள் தூவி
வாழ்த்துக்களை வாரி வழங்கிவிட்டதால்
பொறுத்து பொறுத்து ,பயந்து பயந்து
காய்ந்த இறகின் நுனியில் கரிதொட்டு
வாழ்த்து சொல்கிறது ஒரு சருகு ....
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
-
wish kuda kavithaila arumai kavignare ungal tamilai parthu asanthu poyi viten
-
Vaalththai kavithai ya solirukinga
nalaruku
ithai birthday wish la potta inum nalarukum nu nenaikuren
-
Ennam ennavo enakkum adhuvaaga thaan irundhadhu
irundhum neelam karudhi yosonaiyaai irundhadhu
thavira silarin anumadhikkaagavum kaathirundhein
nitchayam vaazhthu pagudhiyilum padhivu perum..
-
neelam oru thadai illai enpathu en karuthu
-
Un karuththirkku mudhanmai tharum nimiththamaai mudivil maatram.vaazthu
pagudhiyilum padhikkapadum.
-
Nantri Ajith
-
அனுவிற்கு வாழ்த்து
அருமை
அஜித் நாயகனே என்
ஆசை நண்பனே எங்கே கற்றாய்
அழகாக தமிழை கையாளும் செப்படி வித்தையை
அன்பர்கள் (நண்பர்கள்)
அனைவர்க்கும் உன் எழுத்து மீது
அபிப்ராயம் வர காரணம் என்னவோ?
தமிழே உனக்கு
ஆட்பட்டு போனதோ ?
ஆதலால்தான் எழுத்தில் இத்துனை
ஆதிக்கமா....
அடிபணிந்து கேட்கிறேன் கூறிடு ஒருமுறையேனும்
அடியேனும் உன் சீர்மிகு தலைமையில்
அணி சேர முயல்கிறேன்..
-
கற்றவனாய் எனை கருதி பெரும்
கொற்றவனை போல் புகழ் பாராட்டை
இட்டவனே , என் இட்டமானவனே !
கெட்டவனுக்கு மற்றவன் (எதிர் சொல் ) நீ !
என்னை விட தமிழ் வளம் ,பெற்றவன் நீ !
என் பதிப்பு தோழமைக்கு, உற்றவன் நீ !
முதற்படி தமிழையே கட்டறவன் அல்ல நான்
உன் அரும்பெரும் பாராட்டுகளை பெரும்
அடிப்படை தகுதியும் கூட பெற்றவன் அல்ல நான்
தோல் மீது கைபோட்டு தோழமை பேசலாம்
அடிபணிந்து கேட்டிட ஆளும் கட்சிக்காரன்அல்ல நான்
ஆறு கோடி உறுப்பினர் கொண்ட (தமிழ்) அணியில்
தற்போது தான் நானே இணைந்திருக்கிறேன் ...
உறுப்பினர் அட்டை கூட வரவில்லை
அதற்குள் தனி அணியா ??
இருக்கின்ற அணி போதுமே ?????
வேண்டுமானால் ஒன்று செய்வோமே ...
எனக்கும் சேர்த்து இடம் பார், தேன் தமிழ்
பழகும் மாணவர் அணியில் .....
-
varigal nandru ajith meisilirka vaikirathu
tamizhil naanum oru maanavaney
thamizh aniyil inaivathu nandru ena karuthinalum
maanava ani ondru irukumaanaal athiley thodarvom....
room potu yosichalum athuku mela tamizh vara la pa